ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சுப்மன் கில் சதம்… நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ரன் குவிப்பு…

சுப்மன் கில் சதம்… நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ரன் குவிப்பு…

சுப்மன் கில்

சுப்மன் கில்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் 14 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து பெர்குசன் பந்துவீச்சில் கேப்டன் டாம் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான, முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் சதம் அடித்துள்ளார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், இந்திய அணி தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்ததாக நியூசிலாந்து அணியுடன் இந்தியா மோதி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார்.

இதையடுத்து ரோஹித்தும், சுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கினர். இருவரும் இந்திய அணிக்கு நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். இந்திய அணி 60 ரன்களில் இருந்த போது ரோகித் சர்மா டிக்னர் பந்து வீச்சில் டேரில் மிட்ச்செலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 38 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார். அடுத்து வந்த விராட் கோலி 10 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில், சான்ட்னர் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் 14 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து பெர்குசன் பந்துவீச்சில் கேப்டன் டாம் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதன்பின்னர் இணைந்த சுப்மன் கில் – சூர்யகுமார் ஜோடி அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தது. சூரியகுமார் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட்டுகளை ஒரு பக்கம் சரிந்தாலும், ஓபனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில் நிலைத்து நின்று விளையாடி சதம் அடித்தார். 87 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் கில் இந்த சதத்தை விளாசியுள்ளார். இந்திய அணி தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வருவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்தப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் இடம் பெற்றுள்ளார். உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

First published:

Tags: Cricket