ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IND vs NZ ODI : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது… ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு…

IND vs NZ ODI : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது… ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு…

ரோஹித் சர்மா - டாம் லாதம்

ரோஹித் சர்மா - டாம் லாதம்

இந்தியா – நியூசிலாந்து இடையே 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன ரோஹித் சர்மா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை அட்டகாசமாக கைப்பற்றிய நிலையில், இந்திய அணி அடுத்த அசைன்மென்டுக்கு தயாராகியுள்ளது. 3 போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது. டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்துள்ளார்.

இந்த தொடரில் இந்திய அணி தரப்பில் முன்னணி பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக பங்கேற்க மாட்டார். இதேபோன்று ரவிந்திரா ஜடேஜாவுக்கு உடல் தகுதி பிரச்னை காரணமாக விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மற்றொரு முக்கிய ஆட்டக்காரரான பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் விளையாட மாட்டார்.  இதேபோன்று தனிப்பட்ட காரணங்களுக்காக கே.எல்.ராகுல் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இடம்பெறவில்லை.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியின் ஆடும் லெவனில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகம்மது சிராஜ், முகம்மது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இலங்கை தொடரில் இடம்பெற்ற உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

First published:

Tags: Cricket