Home /News /sports /

வேணாம் தம்பி பேசாம போய்டு... பரபரப்பான கட்டத்தில் கலகலப்பூட்டிய சாஹல்

வேணாம் தம்பி பேசாம போய்டு... பரபரப்பான கட்டத்தில் கலகலப்பூட்டிய சாஹல்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டியின் பரபரப்பான கட்டத்தில் சாஹல் - சாண்ட்னர் ஜாலியாக மோதிக் கொண்டது சிரிப்பலையை உண்டாக்கியது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய  அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்தியா ஏற்கனவே தொடரைக் கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இன்று வெலிங்டனில் உள்ள வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 4-வது ஆட்டத்திலும் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்தின் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் கடைசி மூன்று பந்தில் அந்த அணியின் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் தாகூர் வீசினார்.

அப்போது திடிரென பேட்டிங் செய்ய களமிறங்கிய  சாண்ட்னர் அருகில் சென்ற சாஹல் அவரை முறைத்தார். என்ன நடக்கிறது என எல்லோரும் குழப்பமடைய மறுவினாடியே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ள, அவர்கள் கிண்டலுக்காக வம்பிழுத்து விளையாடுவது தெரியவந்தது.



பரபரப்பான இறுதிக் கட்டத்தல் இந்த கிளுகிளுப்பு உங்களுக்கு தேவையா? என்பது போல் இருந்தது அவர்கள் நடந்து கொண்டது என்றே சொல்லலாம்..!
Published by:Vijay R
First published:

Tags: Ind vs NZ

அடுத்த செய்தி