• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கான்பூர் டெஸ்ட்: இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட்

கான்பூர் டெஸ்ட்: இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்திய அணியை 345 ரன்களுக்கு மட்டுப்படுத்திய நியூசி.

இந்திய அணியை 345 ரன்களுக்கு மட்டுப்படுத்திய நியூசி.

நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும் அஜாஜ் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

  • Share this:
    இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கான்பூர் டெஸ்ட் 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 258/4 என்று தொடங்கிய இந்திய அணியில் ஷ்ரேயஸ் அய்யர் அறிமுக போட்டியிலேயே சதம் எடுத்து 105 ரன்களில் சவுதீயிடம் ஆட்டமிழந்தார்.

    சற்று முன் வரை நியூசிலாந்து அணி தன் முதல் இன்னிங்சை ஸ்டெடியாகத் தொடங்கி 35 ரன்களுக்கு நோ-லாஸ் என்று உள்ளது. டாம் லேதம் 10 ரன்களுடனும் வில் யங் 24 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

    இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.

    மயங்க் அகர்வால் 13 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் அடுத்து களமிறங்கிய புஜாரா சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது.

    கில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்த சிறிது நேரத்தில் புஜாராவும் 26 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ரகானே 35 ரன்கள் எடுக்க, ஜேமிசன் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து களமிறங்கிய ஷ்ரயாஸ் அய்யரும், ஜடேஜாவும் அணியை சரிவில் இருந்து மீட்டு சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர் .சிறப்பாக விளையாடிய ,ஜடேஜா அரைசதம் அடித்தார் .

    இன்று காலை இறங்கியவுடனேயே ஷ்ரேயஸ் அய்யர் கைல் ஜேமிசனை 2 பவுண்டரிகள் அடித்தார். இந்த இரண்டாவது ஷாட் அருமையான டச் ஷாட், கல்லி, பாயிண்டுக்கு இடையே பவுண்டரி பறந்தது. அதன் பிறகு ஜேமிசனை 3 பவுண்டரி அடித்து 90களுக்குள் புகுந்து 96 ரன்களுக்கு வந்தவர். கடைசியில் ஜேமிசன் பந்தைத்தான் 2 ரன்கள் எடுத்து அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் கண்டார்.

    அருமையான இந்த இன்னிங்சில் 159 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்சர்களுடன்தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அவர் 171 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டரி, 2 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சவுதி பந்தை சாதாரணமாக கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறியது ஏமாற்றமளித்தது.

    அஸ்வின் 38 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 111.1 ஓவர்களில் 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. உமேஷ் யாதவ் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும் அஜாஜ் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: