• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • India vs New Zealand | நியூசிலாந்தை வீழ்த்த இந்திய அணி கருத்தில் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்

India vs New Zealand | நியூசிலாந்தை வீழ்த்த இந்திய அணி கருத்தில் கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்

கோலி-வில்லியம்சன்.

கோலி-வில்லியம்சன்.

நாளை, ஜூன் 18ம் தேதி இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்குகிறது, இங்கிலாந்தை வீழ்த்தி தன்னம்பிக்கையின் உச்சத்தில் நியூசிலாந்து உள்ளது.

 • Share this:
  முன்னாள் இந்திய தொடக்க வீரரும் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்டுமான ஆகாஷ் சோப்ரா நியூசிலாந்தை வீழ்த்த இந்திய அணி செய்ய வேண்டிய 5 விஷயங்கள் பற்றி தன் கிரிக் இன்போ இணையதளப் பத்தியில் எழுதியுள்ளார்.

  அவர் கூறும் 5 விஷயங்கள் என்னென?:

  1. ஆக்ரோஷத்தை விட கட்டுக்கோப்புடன் ஆடுவதை விரும்பும் நியூசிலாந்து:

  ஒவ்வொரு அணியும் டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு விதமாக ஆடும், நியூசிலாந்து அணி எப்படி எனில் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் நீண்ட நேரம் வைத்திருக்க விரும்பும் அணி. அப்போது ஆட்டம் எந்தத் திசையிலும் செல்லாத நிலையில் இருக்கும். ஆனால் அதுதான் அவர்களுக்குப் பிடிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக சாதகங்களை சேகரிக்கும் அணி அது. ஒன்று அல்லது 2 செஷன்களில் அவர்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தார்கள் என்றால் அதை மேலும் நீட்டிக்க விரும்புவார்கள். பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் நியூசிலாந்து வீரர்கள் ஆக்ரோஷத்தை விட கட்டுக்கோப்பையே விரும்புவார்கள்.

  Also Read: இஷாந்த் சர்மா, ஜடேஜாவுக்கு இடமில்லை- மீண்டும் சஞ்சய் மஞ்சுரேக்கர்

  2. சோர்வூட்டக்கூடிய கிரிக்கெட் ஆட்டத்தை விளையாட தயாராக இருக்க வேண்டும்:

  நியூசிலாந்து போன்ற அணிகளுடன் ஆடும்போது அவர்களின் அணுகுமுறைக்கு ஏற்ப நம் ஆட்டத்திலும் உத்தியிலும் சிறு மாற்றம் செய்து கொள்ளவேண்டும். டெஸ்ட் போட்டியில் பல்வேறு கட்டங்கள் இருக்கும், இதில் ஆஃப் சைடில் அதிக பீல்டர்களை நிற்க வைத்து ஆஃப் ஸ்டம்ப் மற்றும் அதற்கு சற்று வெளியே வீசி நம் பொறுமையை சோதிப்பார்கள். அவர்கள் வீசும் லெந்த்தும் டிரைவ் ஆட முடியாமலும் இருக்கும் பின்னால் சென்று கட் ஆட முடியாத ஒரு வகையான ஷார்ட் ஆஃப் லெந்த் பந்து வீச்சாக இருக்கும்.... இந்திய அணி அவர்களது உத்தியை மதித்து ஓவர் ஆக்ரோஷமாக ஆடுவதைத் தவிர்த்தல் நல்லது. இரண்டு விக்கெட்டுகள் சடுதியில் விழுந்தால் அது ஆட்டத்தின் போக்கையே தீர்மானித்து விடும். இதில் கவனமாக இருக்க வேண்டும்.

  இந்திய அணி.


  3. பவுன்சர்கள் வீசுவது அவசியம்:

  இங்கிலாந்தில் சீரான முறையில் ஷார்ட் பிட்ச் எழுச்சி பந்துகளை வீச முடியாது. ஆனால் இந்திய அணி போன்ற நல்ல வேகம் வீசக்கூடிய பவுலர்கள் இருக்கிறார்கள் என்றால் பவுன்சர்களை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். பொதுவாக ராஸ் டெய்லர், கொலின் டி கிராண்ட் ஹோம் போன்ற வீரர்களுக்குத்தான் பவுன்சர்களை வீசுவார்கள் ஆனால் இந்திய பவுலர்கள் டாம் லேதம், ஹென்றி நிகோல்ஸ், டெவன் கான்வே ஆகியோருக்கு எதிராகவும் பவுன்சர்களை வீச வேண்டும். புது பேட்ஸ்மென் கிரீசுக்கு வரும் போது கால்கள் நகராது, அப்போது பவுன்சர்களை வீச வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  4. தாக்குதல் முறை பந்து வீச்சை அதீதமாகப் பயன்படுத்தக் கூடாது:

  ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன் தவிர நியூசிலாந்து அணியில் பேட்டிங் சூப்பர்ஸ்டார்கள் யாரும் இல்லை. இவர்களில் பலரும் கவர்ச்சிகரமான ஷாட்களை ஆடக்கூடியவர்களும் அல்லர். சிறுகச் சிறுக ரன் சேர்ப்பதில்தான் இவர்களுக்கு ஆர்வம். லேதம், கான்வே, பிளண்டெல், வாட்லிங், வில்லியம்சன் ஆகியோர் எதிரணியின் பவுலர்களை எளிதில் விகெட்டுகளை கொடுக்காமல் சோர்வடையச் செய்யும் உத்தியையே மேற்கொண்டு ஆடுவார்கள். எனவே இவர்களுக்கு நேராகவும் ஃபுல்லாகவும் வீச இந்திய பவுலர்கள் முடிவெடுப்பார்கள், இது ஒருவிதத்தில் தாக்குதல் உத்திதான், ஆனால் இதை மேலதிகமாகப் பயன்படுத்தக் கூடாது, இந்திய பவுலர்களுக்கு பொறுமை தேவை. பெரும்பாலான விக்கெட்டுகள் சாதாரண பந்துகளுக்குத்தான் கிடைக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கட்டுக்கோப்பை கட்டுக்கோப்பு மூலம் தான் சமாளித்து யார் முதலில் தவறு செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

  5. கீழ்வரிசை பேட்டிங் ஆர்டரின் முக்கியத்துவம்:

  இரு அணிகளிலுமே நல்ல பவுலர்கள் இருப்பதால், கிரேட் வேகப்பந்து வீச்சு இருப்பதால் இரு அணிகளுமே தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள். கீழ்வரிசை பேட்டிங் களத்தில் இருக்கும் போதும் பிடியை விட்டு விடக்கூடாது. இங்கிலாந்தில் மரபான ஸ்விங் பவுலிங்குக்குத்தான் சாதகம், ரிவர்ஸ் ஸ்விங் எடுக்காது. நியூசிலாந்தின் பவுலர்கள் அதிவேகம் வீசக்கூடியவர்கள் அல்ல என்பதால் இந்திய டெய்ல் எண்டர்கள் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை பேட்டிங்கில் செய்ய முடியும். இந்த வாய்ப்பை இவர்கள் பயன்படுத்த வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: