முகப்பு /செய்தி /விளையாட்டு / நியூசி.-க்கு எதிரான 2ஆவது டி20-யில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

நியூசி.-க்கு எதிரான 2ஆவது டி20-யில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

இந்திய அணியின் பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி

இந்திய அணியின் பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி

70 ரன்னுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் அணி இருந்தபோது, சூர்ய குமாருடன் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இணைந்து பொறுப்புடன் விளையாடினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.   டாஸில் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் 11 ரன்கள் எடுத்திருந்தபோது சாஹல் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். மற்றொரு வீரர் டெவோன் கான்வே 11 ரன்களிலும், மார்க் சாப்மன் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கிளென் பிலிப்ஸ் 5 ரன்னிலும், டேரில் மிட்ச்செல் 8 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த மைக்கேல் பிரேஸ் வெல் 14 ரன் எடுத்தார்.

நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் 20 ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக  அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில் 11 ரன்னிலும், இஷான் கிஷன் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். குறிப்பாக இஷான் கிஷன் 32 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்களை எடுத்தார்.

அடுத்து வந்த ராகுல் திரிபாதி 18 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அரைச் சதம் அடித்த வாஷிங்டன் சுந்தர் 9 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். 70 ரன்னுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் அணி இருந்தபோது, சூர்ய குமாருடன் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இணைந்து பொறுப்புடன் விளையாடினார். 19.5 ஆவது ஓவரில் இந்திய அணி 101 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை வென்றது. சூர்ய குமார் யாதவ் 26 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் வரும் புதன் அன்று நடைபெறுகிறது.

First published:

Tags: Cricket