பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோலி தலைமையிலான இளம் அணி, சவாலான தொடரின் முதல் போட்டியில் நாளை விளையாடவுள்ளது.
உள்ளூரில் சூரர்களாக விளங்கும் இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளுக்குச் சென்றால் தடுமாறுவது வாடிக்கை. கங்குலி, தோனி மற்றும் கோலி போன்ற கேப்டன்கள் தலைமையிலான அணிகள் அவ்வப்போது வெளிநாடுகளில் தொடர்களைப் கைப்பற்றி இருந்தாலும் இந்தியாவுக்கு வெளியே ஆடுவதென்றாலே இன்றும் நம்மவர்களில் பலருக்கு கிலிதான். குறிப்பாக பவுன்சர்களுக்கு ஏற்ற நியூசிலாந்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு என்றும் சிம்மசொப்பனம் தான்.
நியூசிலாந்து மண்ணில் எந்தத் தொடர்களிலும் அதிகம் வென்றிராத இந்தியா, கடைசியாக 2018-19ல் அங்கு சென்றபோது 50 ஓவர் தொடரை 4-க்கு1 என கைப்பற்றியது. எனினும் அப்போது 20 ஓவர் போட்டியில் தோல்வியைத் தழுவியது. டி20 போட்டிகளில் இதுவரை நியூசிலாந்தில் 5-ல் ஒரு போட்டியில் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியே டி20 போட்டியாக அமைந்துள்ளதால், இந்தியா சற்று எச்சரிக்கையாகவே அணுகும்.
Also Read : IPL 2020: எம்.எஸ்.தோனி முதல் சாய் கிஷோ் வரை... சி.எஸ்.கே வீரர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
ஷிகர் தவன், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் புதுவேகத்துடன் ஆடி வந்த இஷாந்த் சர்மா ஆகிய அனுபவ வீரர்கள் காயம் காரணமாக இடம்பெறாதது இந்தியாவுக்கு சற்று பின்னடைவே ஆகும். இதுபோல் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசி அணியிலும் ராஸ் டெய்லர், டிரென்ட் பவுல்ட் ஆகிய அனுபவ வீரர்கள் காயம் காரணமாக இடம்பெறாதது இந்தியாவுக்கு ஆறுதல்.
எனினும் ரிஷப் பந்த், ஷிவம் துபே, மற்றும் சஞ்சு சாம்சன் போன் கிவி தேசத்துக்கு முதல் முறையாக செல்லும் பேட்ஸ்மேன்களால் மிடில் ஆர்டர் உறுதியற்று இருக்கிறது. அதே நேரத்தில் நியூசிலாந்தில் தற்போது இந்தியா ஏ அணி சார்பாக சதங்களை விளாசி வரும் பிரித்வி ஷா... ஒரு நாள் போட்டிகளில் ஷிகர் தவனுக்கு பதிலாக துவக்க வீரராக சேர்க்கப்படக்கூடும் எனக் தெரிகிறது. அவரது வருகை அணிக்கு பலம் சேர்க்கும்.
50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதியில் இந்தியாவை வெளியேற்றியது
நியூசிலாந்துக்கு பதிலடி தருவீற்களா என கேட்டபோது அப்படி அணுகப்போவதில்லை என கோலி தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.