இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்... தவானுக்கு பதிலாக களமிறங்குவது இவரா...?

ICC World Cup 2019 | இந்தியா - நியூசிலாந்து அணிகள் உலகக் கோப்பை தொடர்களில் 7 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் 4 முறை நியூசிலாந்தும், 3 முறை இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்... தவானுக்கு பதிலாக களமிறங்குவது இவரா...?
இந்தியா
  • News18
  • Last Updated: June 13, 2019, 7:48 AM IST
  • Share this:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. நாட்டிங்காம் நகரில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

ஏற்கனவே அடுத்தடுத்து வெற்றி பெற்ற இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. காயம் காரணமாக தவான் விலகியதால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ளார்.
4-வது இடத்தில் களமிறங்கும் வீரராக இன்றைய போட்டியில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் களமிறக்க வாய்ப்புள்ளது. நியூசிலாந்து அணியை பொருத்தவரை ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அசுர பலத்தில் உள்ளது.

பேட்டிங், பந்துவீச்சில் ஜொலிக்கும் நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் நாட்டிங்காம் மைதானத்தில் இன்று மழை வருவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நாட்டிங்காம்


எனவே இன்று முழுமையாக போட்டி நடைபெறுவது சந்தேகமே. இரு அணிகளும் உலகக் கோப்பை தொடர்களில் 7 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இதில் 4 முறை நியூசிலாந்தும், 3 முறை இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... தோனியின் கையுறையிலுள்ள ராணுவ முத்திரையை நீக்குங்கள்: ஐசிசி அறிவுறுத்தல்

Also see...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading