• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • #INDvsNZ | இந்தியாவிற்கு எதிரான டெஸ்டில் புதிய வரலாற்றுச் சாதனை படைக்க காத்திருக்கும் ராஸ் டெய்லர்..!

#INDvsNZ | இந்தியாவிற்கு எதிரான டெஸ்டில் புதிய வரலாற்றுச் சாதனை படைக்க காத்திருக்கும் ராஸ் டெய்லர்..!

ராஸ் டெய்லர்

ராஸ் டெய்லர்

  • Share this:
    இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ள ராஸ் டெய்லர் புதிய வரலாற்று சாதனை படைக்க உள்ளார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் ராஸ் டெய்லர் களமிறங்கினால் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து போட்டிகளிலும் தலா 100 ஆட்டங்களில் விளையாடிய நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைப்பார். நியூசிலாந்து அணிக்காக 3 விதமான போட்டிகளிலும் ராஸ் டெய்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டியில் ராஸ் டெய்லர் சிறப்பாக விளையாடினாலும் நியூசிலாந்திற்கு வெற்றியை தேடித் தரமுடியாமல் போனார். ஆனால், ஒரு நாள் போட்டியில் அபாரமாக விளையாடி நியூசிலாந்து தொடரை வெற்றி பெற முக்கிய வீரராக இருந்தார்.

    Also Read : புதிய தொடக்க வீரர்கள், ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளர்... இந்திய டெஸ்ட் அணி இதுதானா?

    35 வயதான ராஸ் டெய்லர் “நான் இன்னும் சிறப்பாக விளையாடுவதை உணர்கிறேன். எனது அணிக்காக களத்திலும் வெளியிலும் நான் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. ரன்வேட்டையில் என்றும் நான் பசியுடன் உள்ளேன். கிரிக்கெட் நான் விரும்புகிறேன். அது எனக்கு எப்போதும் முதன்மையானது“ என்றுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: