• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IND vs NZ| அன்று ஷாகின் அப்ரீடி, இன்று ட்ரெண்ட் போல்ட், அங்கு பாபர் அசாம், இங்கு வில்லியம்சன் - சமாளிக்குமா இந்திய அணி?

IND vs NZ| அன்று ஷாகின் அப்ரீடி, இன்று ட்ரெண்ட் போல்ட், அங்கு பாபர் அசாம், இங்கு வில்லியம்சன் - சமாளிக்குமா இந்திய அணி?

அப்ரீடி-போல்ட்

அப்ரீடி-போல்ட்

  • Share this:
    இன்று இரவு 7:30 மணிக்கு துபாயில் மிக முக்கியமான டி20 உலகக்கோப்பை போட்டியில் கோலி தலைமை இந்தியாவும் கேன் வில்லியம்சன் தலைமை நியூசிலாந்தும் மோதுகின்றன. இடது கை வேகப்பந்து வீச்சு என்றால் இந்திய அணிக்கு அந்தக் காலம் முதலே சிக்கல்தான். ஹபீஸ் ஹமீது முதல் வாசிம் அக்ரம் வரை, முகமது ஆமிர் இப்போது ஷாகின் அப்ரீடி, அந்த வரிசையில் இன்று நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் மூலம் இந்திய அணிக்கு அச்சுறுத்தல் உள்ளது.

    இந்தியா-நியூசிலாந்து போட்டி என்றாலே சமீப காலங்களில் போட்டி விறுவிறுப்படைகிறது. 2019 உலகக்கோப்பையில் தோனி ஆடிய அந்த கடைசி போட்டியில் அரையிறுதியில் தோனியை மார்டின் கப்தில் ரன் அவுட் செய்ததும் இந்தியா தோல்வி அடைந்ததையும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். டி20 தொடரில் ரோகித் சர்மா அடித்த அந்த சூப்பர் சிக்ஸர்கள் மூலம் இந்தியா தொடரை வென்றது என்று நினைத்துப் பார்க்க சில விஷயங்கள் உள்ளன

    ஆனால் இன்று இரு அணிகளுமே தங்கள் பலவீனங்களை அறிந்த அணிகள், நன்றாக ஆடவில்லை என்பதை அறிந்த அணிகள். இந்தியாவைப் பொறுத்தவரை அன்று ஷாகின் அப்ரீடி பிரமாதமான பந்துகளில் ராகுல், ரோகித் சர்மாவை தூக்கியதில் இந்தியா ஆடிப்போய்விட்டது மீள முடியவில்லை, பிறகு விராட் கோலியையும் ஸ்லோ பவுன்சரில் வீழ்த்தினார் அப்ரீடி. இன்று நியூசிலாந்தில் ட்ரெண்ட் போல்ட் இருக்கிறார். ஓபனிங் டேஞ்ஜர் இந்தியாவுக்கு இருக்கிறது.

    அதே போல் பேட்டிங்கில் அங்கு கேப்டன் பாபர் அசாம், இங்கு நியூசிலாந்தில் கேன் வில்லியம்சன். ஒன் டு ஒன் இந்தியாவுக்கு நியூசிலாந்து அச்சுறுத்தலாக உள்ளது, ஆனால் இந்திய பேட்டிங்கில் உள்ள ஃபயர் பவர் அங்கு கிடையாது. இன்று இந்தியா தொடக்கத்தில் விக்கெட்டுகள் விழ அனுமதிக்கக் கூடாது, அதே போல் டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்யும். நேற்று ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து திணறியது. துபாயில் முதலில் பேட் செய்யும் அணிகள் திணறுவதைப் பார்க்க முடிகிறது. இரு பிரமாத அணிகள் மோதும்போது டாஸ் போட்டியைத் தீர்மானிப்பது அழக்கல்ல.

    Also Read: IND vs NZ| இந்தியா-நியூசிலாந்து விளையாடும் 11 வீரர்கள் விவரம்: நேருக்கு நேர்- முழு விவரம்

    துபாயில் இந்த ஆண்டு மட்டும் 2வதாக பேட் செய்யும் அணி 18 முறையில் 14 முறை வென்றுள்ளது. ரோகித் சர்மாவை ட்ரெண்ட் போல்ட் 3 முறை வீழ்த்தியுள்ளார். மிட்செல் சாண்ட்னர், டிம் சவுதியும் ரோகித் சர்மாவை 3 முறை வீழ்த்தியுள்ளனர். அதே போல் முகமது ஷமி, நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனை 4 முறை டி20 போட்டிகளில் வீழ்த்தியுள்ளார்.

    டாப் ஆர்டர் இந்திய வீரர்களுக்கு ராகுல், ரோகித் சர்மா, ஏன் விராட் கோலிக்குக் கூட இடது கை வேகப்பந்து வீச்சாளர்களின் இன்ஸ்விங்கர்கள் கடும் பிரச்சனையாக உள்ளது. இன்று நிச்சயம் அந்த பலவீனத்தைப் பயன்படுத்த ட்ரெண்ட் போல்ட் தயங்க மாட்டார், அவரை அடித்து ஆட வேண்டும். அதே போல் கேன் வில்லியம்சனை ஷமியை வைத்தோ ஸ்பின்னரை வைத்தோ காலி செய்ய வேண்டும். வருண் சக்ரவர்த்தி அணியில் இருந்தால் பவர் ப்ளேயில் அவருக்கு கொடுத்துப் பார்க்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: