• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 Worldcup 2021: பாகிஸ்தானுடன் தோற்றதற்காக ஓபனிங்கை மாற்றுவதா?- அஜித் அகார்கர் கேள்வி

T20 Worldcup 2021: பாகிஸ்தானுடன் தோற்றதற்காக ஓபனிங்கை மாற்றுவதா?- அஜித் அகார்கர் கேள்வி

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

  • Share this:
    நியூசிலாந்துக்கு எதிராக துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இரண்டாவது போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்தது, பாகிஸ்தானுடன் தோற்றதற்காக நியூசிலாந்துக்கு எதிராக தொடக்கக் கூட்டணியை மாற்றுவதா அப்படிச் செய்திருக்கக் கூடாது என்கிறார் அஜித் அகார்க்கர்.

    இந்திய அணி 6வது ஓவரில் இருந்து 15வது ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. 73 பந்துகளுக்கு பிறகு 17வது ஓவரில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்தது. இந்த இன்னிங்ஸில் மொத்தம் 54 பந்துகள் ரன் ஏதும் எடுக்கவில்லை. அனைத்தும் டாட் பந்துகளாக வீசி இருந்தது நியூசிலாந்து.

    இந்திய அணி நிர்ணயித்த 111 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் 33 ரன்களுடனும், கான்வே 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தத் தோல்வியை அடுத்து அடுத்த 3 போட்டிகளில் இந்தியா வென்றாலும் நியூசிலாந்து தோல்வியடைய காத்திருப்பதோடு நெட் ரன் ரேட்டையும் உயர்த்திக் கொள்ள வேண்டும், இதெல்லாம் நடக்கற காரியமல்ல என்பதால் இந்திய அணியின் டி20 உலகக்கோப்பை 2021 முடிந்தது என்றே கூற வேண்டும்.

    நேற்று ராகுல், இஷான் கிஷன் இறங்கினர், ரோகித் சர்மா 3ம் நிலைக்குத் தள்ளப்பட்டார், ஒரு தோல்விக்குப் பிறகே இப்படி செய்யக்கூடாது என்று அஜித் அகார்க்கர் கூறுகிறார். உண்மையில் ஷாகின் அஃப்ரீடி போல் ட்ரெண்ட் போல்ட் ரோகித்தை காலி செய்வார் என்ற அச்சம்தான் காரணம். ஏனெனில் ரோகித் சர்மாவை 3 முரை ட்ரெண்ட் போல்ட் எடுத்துள்ளார், சாண்ட்னர் 3 முறை வீழ்த்தியுள்ளார்.

    இந்நிலையில் கிரிக் இன்போ இணையதளத்துக்காக பேட்டியளித்த அஜித் அகார்க்கர் கூறியதாவது: “இது ஒரு மோசமான தோல்வி, மிக மோசமான ஆட்டம். கிரிக்கெட் களத்தில் கடினமான நாட்கள் இருக்கவே செய்யும். தோல்வி சகஜம், ஆனால் தோற்கும் விதம் என்ற ஒன்று உள்ளது. மீண்டும் இந்திய அணியை கைவிட்டது பேட்டிங்தான். அன்று பாகிஸ்தான் தனித்துவப் பந்து வீச்சை வெளிப்படுத்தினர்.

    நியூசிலாந்து அணியும் நன்றாக வீசினர். இந்தியாவின் பிரச்சனை என்னவெனில் சில வேளைகளில் ஃபார்ம், சில வேளைகளில் தைரியமின்மை. இன்று பேட்டிங்கில் தொடக்க கூட்டணியில் மாற்றம் செய்தது தவறு. எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஒரு தோல்விக்குப்பிறகு ரோகித் சர்மாவை 3ம் நிலையில் இறக்குவதா, நல்ல அணி இப்படியெல்லாம் செய்யாது. அப்படியும் இந்த மாற்றம் வேலையும் செய்யவில்லை.

    எனவே ஏமாற்றமான பேட்டிங், சமீப காலங்களிலேயே இதுதான் மிகவும் ஏமாற்றமளிக்கும் பேட்டிங் ஆகும். நல்ல டீம் தான், ஆனால் நல்ல டீமாக ஆடவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: