• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்தியா-நியூசிலாந்து டி20- விராட் கோலியை தகர்த்தார் மார்டின் கப்டில்

இந்தியா-நியூசிலாந்து டி20- விராட் கோலியை தகர்த்தார் மார்டின் கப்டில்

மார்டின் கப்டில்

மார்டின் கப்டில்

  • Share this:
    டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை இந்தியாவின் முன்னாள் டி20 கேப்டன் விராட் கோலி கைவசம் வைத்திருந்தார். அதை நேற்று தகர்த்தார் நியூசிலாந்து தொடக்க வீரர் மார்டின் கப்டில்.

    விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 95 போட்டிகளில் 3,227 ரன்களை எடுத்திருந்தார், இதை கப்டில் நேற்று முறியடித்தார். நேற்று இறஞ்கி அதிரடியாக ஆடிய கப்டில் 15 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்து தீபக் சாகரின் ஷார்ட் பிட்ச் பந்தில் வெளியேறினார், ஆனால் கோலி சாதனையை இதில் முறியடித்துவிட்டுச் சென்றார்.

    இப்போது மார்டின் கப்டில் 111 டி20 போட்டிகளில் 3,248 ரன்கள் எடுத்து டி20 சர்வதேசப் போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை எட்டினார். இதில் 2 சதங்கள், 19 அரைசதங்களை மார்டின் கப்டில் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் மார்டின் கப்டில் 286 போட்டிகளில் 8,135 ரன்களை விளாசியுள்ளார்.

    மார்டின் கப்டில் சர்வதேச டி20யில் 32.47 என்ற சராசரி வைத்துள்ளார். விராட் கோலி நெருங்க முடியாத 52.04 என்ற சராசரியை வைத்துள்ளார், ஆனால் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை சதம் எடுத்ததில்லை. மொத்தமாகப் பார்த்தாலும் விராட் கோலி 324 டி20 போட்டிகளில் 10,204 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 41.14.

    டாஸில் தொடர்ந்து 2ம் முறையாக வென்ற ரோகித் சர்மா சேசிங் தான் இந்தியாவுக்கு சரியான வழி, புள்ளி விவரங்களும் டி20-யில் இந்திய அணி தாதா என்பதற்கேற்ப ரோகித் சர்மா முதலில் நியூசிலாந்தை பேட் செய்ய அழைத்தார். ஆனால் மார்டின் கப்தில் (15 பந்துகளில் 31), ஆனால் புவனேஷ்வர் குமாரின் முதல் ஓவர் அற்புதம், நல்ல ஸ்விங் கப்டில் சரியாக ஆட முடியவில்லை. ஆனால் 3 பவுண்டரிகளை விளாசி கப்டில் 6 பந்துகளில் 14 என்று இருந்தார், அவருக்கு மிட் ஆனில் ராகுல் கேட்ச் ஒன்றையும் விட்டார்.

    பனிப்பொழிவு ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே ஆரம்பித்து விட்டது. இதனால் பந்துகள் அருமையாக மட்டைக்கு வர கப்டில், டேரில் மிட்செல் (31) வெளுத்து வாங்க பவர் பிளேயில் 6 ஓவர்களில் 64 ரன்கள் என்று பின்னி எடுத்தனர், இரண்டு நேர் சிக்சர்களையும் கப்டில் அடித்து அபாயகரமாகத் திகழ தீபக் சாகர் கப்டிலை நல்ல திசையில் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தில் வெளியேற்றினார். சிக்ஸ் அடித்தவுடன் அவரை வெளியேற்றுவது இரண்டாம் முறையாகும் இந்த வகையில் கப்டிலின் தடத்தை சரியாகப் புரிந்து வைத்துள்ளார் தீபக் சாகர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: