Home /News /sports /

டிக்ளேர் அல்ல, ரஹானே செய்த இன்னொரு பெரிய தவறு என்ன தெரியுமா?

டிக்ளேர் அல்ல, ரஹானே செய்த இன்னொரு பெரிய தவறு என்ன தெரியுமா?

ஷேன் வார்ன்.

ஷேன் வார்ன்.

பழைய பந்திலேயே 4 ஓவர்களை கூடுதலாக வீசியது தான் திருப்பு முனையாக அமைந்து விட்டது. இதனால் நியூசிலாந்து தப்பியது” என்று ஷேன் வார்ன் கூறுகிறார்.

  இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய கான்பூர் டெஸ்ட் டிரா ஆனதற்குக் காரணம் ரகானே செய்த மிகப்பெரிய தவறுதான் என்கிறார் ஷேன் வார்ன். அதாவது 4ம் நாள் இந்திய அணி டிக்ளேர் செய்ததற்கான தாமதம் அல்ல, அது சரிதான், ஆனால் இன்னொரு முக்கியமான தவறை இந்தியா செய்தது என்கிறார் ஷேன் வார்ன்.

  நேற்று 5-ம் நாள் ஆட்டத்தில் ஆட்டம் முடியும் தருணத்தில் வெளிச்சம் போய்க்கொண்டிருந்தது, அதனால் லைட் மீட்டரை வைத்து நடுவர்கள் சரிபார்த்து சரிபார்த்து ஓவரை வீச அனுமதித்தனர். கடைசியில் 90 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டது, ராச்சின் ரவீந்திரா 91 பந்துகள் ஆடி 18 ரன்கள் எடுக்க, அஜாஜ் படேல் அவருக்கு உறுதுணையாக ஆட முதல் டெஸ்ட் டிரா ஆனது. சமீபமாக எதிரணியின் 20 விக்கெட்டுகளை இந்திய பவுலர்கள் எடுக்காமல் இருந்ததில்லை என்பதுதான் இதில் ஆச்சரியம், இந்தியா 17 19 நியூசிலாந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது, ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

  நேற்று கடைசி விக்கெட் ஆடும்போது வேகப்பந்து வீச்சுக்கு கொடுக்காமலே விட்டதும் ஒரு தவறு. ரஹானே பொதுவாக நன்றாக கேப்டன்சி செய்யக்கூடியவர் அவர் எப்படி இப்படி செய்ய முடிந்தது? ஆனால் இதுவும் அல்ல ஷேன் வார்ன் கூறும் காரணம், இதை விடவும் முக்கியமானதை அவர் கூறுகிறார்:

  “80 ஓவர்கள் முடிந்து இன்னொரு புதிய பந்தை எடுக்க வாய்ப்பிருந்தும் இந்தியா எடுக்காமல் பழைய பந்திலேயே வீசியது ஆச்சரியமாக உள்ளது. வெளிச்சமும் குறைந்து வந்தது, ஓவர்களும் முடிந்து கொண்டிருந்தன, ஆனால் பழைய பந்திலேயே வீசினார்கள் இது விசித்திரம்தான்.

  Also Read: கான்பூர் டெஸ்ட் த்ரில் டிரா- 5ம் நாளில் நடந்தது என்ன?

  பழைய பந்திலேயே 4 ஓவர்களை கூடுதலாக வீசியது தான் திருப்பு முனையாக அமைந்து விட்டது. இதனால் நியூசிலாந்து தப்பியது” என்று ஷேன் வார்ன் கூறுகிறார்.

  Also Read: IPL 2022: தோனி, கோலி, ரோகித் சர்மா- தக்க வைக்கப்பட்ட வீரர்கள் முழு விவரம்

  கேன் வில்லியம்சன் இந்த மாதிரியெல்லாம் எதையும் கூறவில்லை, “ஒரு மரபான கிரிக்கெட் பள்ளியின் பாடம்தான் கைகொடுத்தது, நாள் முழுதும் ஆடி விக்கெட்டை விடாதே என்ற அணுகுமுறை. பிரமாதமான டெஸ்ட் போட்டி அனைத்து உணர்வுகளுடன் அபாரமாக நடந்து முடிந்தது. அனைத்து 3 முடிவுகளும் சாத்தியம். அதாவது எங்கள் வெற்றி, இந்திய வெற்றி, டிரா ஆகிய 3 ரிசல்டுகளுமே சாத்தியம் என்ற நிலைதான் இருந்தது.

  Also Read: நியாயமான பிட்ச் தயாரித்த ஊழியர்களுக்கு ரூ.35,000 கொடுத்த ராகுல் திராவிட்- நான் ‘வேற’ என்று நிரூபித்தார்

  திட்டம் என்னவெனில் 5ம் நாளை கடத்தி கடைசி வரை கொண்டு சென்று கடைசியில் வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்க வாய்ப்புள்ளதா என்று பார்ப்பதே. ஆனால் நாங்கள் அத்தகைய சாகசத்துக்கான நிலையில் இல்லை. உலகத்தரம் வாய்ந்த இந்திய ஸ்பின் அட்டாக்கிற்கு எதிராக இதெல்லாம் சாத்தியமா என்ன? எனவே டிராவே மகிழ்ச்சி, முழுத் திருப்தி.” என்றார் வில்லியம்சன்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs New Zealand, Shane Warne

  அடுத்த செய்தி