• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • கான்பூர் டெஸ்ட் : விராட் கோலி இடத்தில் ஷுப்மன் கில்; டிராவிட் - ரஹானே வியூகம்

கான்பூர் டெஸ்ட் : விராட் கோலி இடத்தில் ஷுப்மன் கில்; டிராவிட் - ரஹானே வியூகம்

கோலி இடத்தில் ஷுப்மன் கில்

கோலி இடத்தில் ஷுப்மன் கில்

இங்கிலாந்தில் மீண்டும் தன் தொடக்க இடத்தை பிரமாதமாக பிடித்துத் தக்க வைத்த கே.எல்.ராகுல் நியூசிலாந்துக்கு எதிராக தொடக்கத்தில் களமிறங்குவார்.

 • Share this:
  ஆஸ்திரேலியா தொடரிலும் ஐபிஎல் 2021 தொடரிலும் வெளுத்துக் கட்டிய  'தைரியன்' ஷுப்மன் கில் நியூசிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இல்லாததால் அவர் டவுனாகிய 4ம் நிலையில் இறங்குவார் என்று கூறப்படுகிறது. அதாவது கோலி இல்லாத நிலையில் மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் முயற்சியுடனும் ஷுப்மன் கில்லை சேவாக் போல் எந்த டவுனிலும் களமிறங்கக் கூடிய வீரராக மாற்றவும் திராவிட்-ரகானே கூட்டணி முடிவு செய்திருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் இல்லாத நிலையில் நியூசிலாந்து பவுலிங்கை எதிர்த்து அட்டாக் செய்ய ஷுப்மன் கில்லைத் தயார் செய்வதாகத் தெரிகிறது.

  இங்கிலாந்தில் மீண்டும் தன் தொடக்க இடத்தை பிரமாதமாக பிடித்துத் தக்க வைத்த கே.எல்.ராகுல் நியூசிலாந்துக்கு எதிராக தொடக்கத்தில் களமிறங்குவார். இவருடன் மாயங்க் அகர்வால் இறங்கலாம். புஜாரா, ஷுப்மன் கில், ரகானே என்று பேட்டிங் வரிசை செல்லக்கூடும். ஷுப்மன் கில் பெரிய ஸ்டைலிஷ் வீரர், பேக்ஃபுட்டில் சந்தீப் பாட்டீலுக்குப் பிறகு அதே போல் ஆடும் வீரர், கொஞ்சம் அசாருதீன் ஸ்டைலும் ஷுப்மன் கில்லிடம் இருப்பதால், இவர் ஆடினால் உண்மையில் மிக அழகாக இருக்கிறது.

  இது குறித்து முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஜதின் பராஞ்ஜ்பே கூறும்போது, “மிடில் ஆர்டரில் ஷுப்மன் கில் ஆடுவது நிச்சயம் நல்ல முடிவு, அது அணிக்கு உதவும். எப்போதும் கடுமையாக இறுக்கமாக அணித்தேர்வை வைத்துக் கொள்ளக் கூடாது, கொஞ்சம் நெகிழ்வுத்தன்மை வேண்டும். ட்ரெண்ட் போல்ட் இல்லாதது ராகுல் முதல் மயங்க் அகர்வால், ஷுப்மன் கில் வரை அனைவருக்கும் பயனளிக்கும் ஏனெனில் அந்த இடது கை வேக இன்ஸ்விங்கர் நம்மாட்களுக்கு நைட்மேர் என்பதில் ஐயமில்லை.

  மயங்க் அகர்வால் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை எனில் கோலி வந்த பிறகு நிச்சயம் அவர் கேப்டன்சியில் ஷுப்மன் கில்லைத்தான் அதிகம் விரும்புவார். எனவே கோலி வந்த பிறகு தலைவலி இருக்கிறது, இல்லையெனில் ராகுலை கீப் செய்யச் சொல்லி விட்டு ஷுப்மன் கில்லை அதே மிடில் ஆர்டரில் தொடர வேண்டும். ஆனால் யார் தோல்வியடைந்தாலும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு இருக்க மாட்டார் என்பதே உண்மை.

  எனவே ஷ்ரேயஸ் அய்யரை மிடில் ஆர்டரில் இறக்கும் யோசனை சிறிது தள்ளி வைக்கப்படும் ஷ்ரேயஸ் அய்யர் கொஞ்சம் காத்திருக்க வேண்டியதுதான். இதில் வேடிக்கை என்னவெனில் மாயங்க் அகர்வால் சிறப்பாக ஆடினாலும் டிசம்பர் 17ம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்கா தொடரில் அவர் உட்கார வேண்டியிருக்கும் என்பதே துரதிர்ஷ்டம் என்கிறார் பராஞ்ச்பே.

  நாளை மறுநாள் வியாழனன்று கான்பூரில் இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதற்கான இந்திய பிளேயிங் லெவன் இப்படி இருக்கலாம்:

  கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வால், புஜாரா, ஷுப்மன் கில், ரகானே, விருத்திமான் சகா, அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், உமேஷ் யாதவ், சிராஜ் அல்லது இஷாந்த் சர்மா

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: