• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IND vs NZ| இந்தியா-நியூசிலாந்து விளையாடும் 11 வீரர்கள் விவரம்: நேருக்கு நேர்- முழு விவரம்

IND vs NZ| இந்தியா-நியூசிலாந்து விளையாடும் 11 வீரர்கள் விவரம்: நேருக்கு நேர்- முழு விவரம்

டி20 உலகக்கோப்பை, கோலி-வில்லியம்சன், இந்தியா-நியூசி. மோதல்

டி20 உலகக்கோப்பை, கோலி-வில்லியம்சன், இந்தியா-நியூசி. மோதல்

  • Share this:
    விராட் கோலி தலைமை இந்தியாவும் கேன் வில்லியம்சன் தலைமை நியூசிலாந்தும் இன்று துபாய் மைதானத்தில் இன்று மோதுகின்றன, இரு அணிகளுமே பாகிஸ்தானிடம் சக்கையாக வாங்கிக் கட்டிக் கொண்ட அணிகள் என்பதால் மட்டுமல்ல, இன்று வெல்லும் அணி அரையிறுதி தகுதி பெறும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பதே இந்தப் போட்டியின் சுவாரசியம்.

    உடனே இதை சில ஊடகங்கள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் தோற்றதற்கான பழி தீர்ப்பு போட்டி என்றும் பழிதீர்க்குமா இந்தியா என்றும் செய்திகள் போடுவது வழக்கம். அது வேறு இது வேறு. அது டெஸ்ட் மேட்ச், இது டி20. இது மிக முக்கியமான வித்தியாசம், இதில் நியூசிலாந்தை வீழ்த்தி விட்டால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் வாங்கிய அடி ரெக்கார்ட் புக்கிலிருந்து அழிக்கப்படுமா? ஊடகங்கள்தான் சமூக ஊடகங்களின் அவதூறுகளை ஒரு விதத்தில் வடிவமைக்கின்றன என்று ஒரு சில சமூக விஞ்ஞானிகள் கூறுவதையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

    எப்படி 12 உலகக்கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்த முடியாமல் அன்று வரலாற்றை மாற்றி எழுதியதோ, அதே போல் இதுவரை டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்தை இதுவரை வீழ்த்தியதில்லை. இருமுறை இந்தியா டி20 உலகக்கோப்பைகளில் நியூசிலாந்தைச் சந்தித்து இருமுறையும் தோல்வி கண்டுள்ளது.

    நேருக்கு நேர்: இரு அணிகளும் 2007 முதல் 2021 வரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளதில் 8 நியூசிலாந்தும் 8 இந்தியாவும் வென்றுள்ளது ஒரு மேட்ச் நோ-ரிசல்ட்.

    அதிகபட்ச ஸ்கோர்: இந்தியா ஒரு முறை 208 ரன்கள் விளாசியது.
    குறைந்த ஸ்கோர்: ஒருமுறை 79 ஆல் அவுட் ஆகியுள்ளது.
    நியூசிலாந்து அதிகபட்ச ஸ்கோர் இந்தியாவுக்கு எதிராக 219, ஆகக்குறைந்த ஸ்கோர் 126.

    இந்திய அணியில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக ஸ்கோர்களை எடுத்தவர் ரோகித் சர்மா - 338 ரன்கள். நியூசிலாந்து அணியில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர் கொலின் மன்ரோ 426, ராஸ் டெய்லர் 349.

    அதிக விக்கெட்டுகளில் இஷ் சோதி இந்தியாவுக்கு எதிராக 17 விக்கெட்டுகளையும் மிட்செல் சாண்ட்னர் 12 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர், இந்தியாவைப் பொறுத்தவரையில் நியூசிலாந்துக்கு எதிராக பும்ரா 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
    ஆகவே இன்று ரோகித் சர்மா, பும்ரா மிக முக்கியப் பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

    இந்திய அணி இப்படியிருந்தால் நன்றாக இருக்கும்: ரோகித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ராகுல் சாகர், பும்ரா, ஷமி, அஸ்வின். 

    நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன், மார்டின் கப்தில், டெவன் கான்வே, கைல் ஜேமிசன், டிம் செய்ஃபர்ட், கிளென் பிலிப்ஸ், டிம் சவுதி, ட்ரெண்ட் போல்ட், சாண்ட்னர், ஜிம்மி நீஷம், இஷ் சோதி அல்லது ஆடம் மில்னே

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: