முகப்பு /செய்தி /விளையாட்டு / பிருத்வி ஷாவுக்கு தொடரும் சோகம்… 3ஆவது டி20 போட்டியிலும் வாய்ப்பு இல்லை…

பிருத்வி ஷாவுக்கு தொடரும் சோகம்… 3ஆவது டி20 போட்டியிலும் வாய்ப்பு இல்லை…

பிருத்வி ஷா

பிருத்வி ஷா

3ஆவது போட்டியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறி வந்த நிலையில், இன்றும் பிரித்வி ஷா ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியிலும் பேட்ஸ்மேன் பிரித்வி ஷாவுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடாத நிலையில் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. முதல் 2 போட்டிகளில் இஷான் கிஷன் 23 ரன்களும் சுப்மன் கில் 18 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளனர். குறிப்பாக இஷான் கிஷன் கடந்த 13 இன்னிங்ஸ்களில் அரைச்சதம் ஒன்று கூட அடிக்கவில்லை. அதிகபட்சமாக நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் 32 பந்துகளில் 19 ரன்களை எடுத்தார். இன்றைய போட்டியில் இஷான் கிஷன் 3 பந்துகளில் 1 ரன் எடுத்த நிலையில் பிரேஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில் 3ஆவது போட்டியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறி வந்த நிலையில், இன்றும் பிரித்வி ஷா ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை.

இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சபா கரீம் கூறுகையில், ‘சர்வதேச போட்டிகளுக்குள் பிரித்வி ஷாவை அழைத்து வந்துள்ளார்கள். இதுவே அவருக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். அணியில் இடம்பெற்றிருப்பது அவருக்கு கற்றுக் கொள்ள பல வாய்ப்புகளை அளிக்கும். ராகுல் டிராவிட் அணியில் இருக்கிறார். எனவே ஆடும் லெவனில் அவர் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகம் இல்லை’ என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Cricket