• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியில் முக்கிய மாற்றம்..?

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியில் முக்கிய மாற்றம்..?

இந்திய அணி

இந்திய அணி

  • Share this:
    நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்லியடைந்த இந்திய அணி 2-வது டெஸ்டில் பதிலடி கொடுக்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

    வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி அல்லது உமேஷ் யாதவ் இருவரில் ஒருவர் களமிறங்க வாய்ப்புள்ளது. வெளிநாடுகளில் உமேஷ் யாதவ் சிறப்பாக பந்துவீசி வருவதால் நாளைய போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

    சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்சேர்க்கவில்லை. அதே சமயம் பந்துவீச்சிலும் சோபிக்க தவறியதால் ரவீந்திர ஜடேஜாவை களமிறக்க வாய்ப்புள்ளது.

    தொடக்க வீரர் ப்ரிதிவ் ஷாவிற்கு பதிலாக சுப்மான் கில் அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம். ஆனால் தொடக்க வீரராக யாரை களமிறக்குவது என்பதில் சிக்கல் இருப்பதால் ப்ரிதிவ் ஷா மாற்றம் கேள்விகுறியாக உள்ளது.

    இந்திய உத்தேச அணி : ப்ர்திவ் ஷா, மயங்க் அகர்வால், சத்தீஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனும விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), முகமது ஷமி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: