இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ஆக்லாந்தில் தொடங்குகிறது இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையே 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெறும் நிலையில், முதலாவது போட்டி ஆக்லாந்தில் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியது.
ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஷிகர் தவன் அணியை வழிநடத்துகிறார். விராட் கோலி அணியில் இல்லாத நிலையில், சூர்யகுமார் யாதவ் 3-வது வீரராக களம் இறங்குவார் எனத் தெரிகிறது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில் மார்டின் கப்தில், டிரண்ட் போல்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து தொடர்: கேமரூனை போராடி வென்ற சுவிட்சர்லாந்து
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ind vs NZ, One day match