கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான இன்று த்ரில்லிங்காக முடிந்த போட்டி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. கடைசி 1 விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய அணி வெற்றியைக் கோட்டை விட்டது. நியூசிலாந்தின் கடைசி ஜோடி ராச்சின் ரவீந்திரா, அஜாஜ் படேல் ஆகிய இந்திய வம்சாவளியைச் சார்ந்த நியூசிலாந்து வீரர்கள் 56 பந்துகளை வெற்றிகரமாகத் தடுக்க ஆட்டம் டிரா ஆனது.
இந்திய அணியில் ஜடேஜா பிரமாதமாக வீசி 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்று 4/1 என்று தொடங்கிய நியூசிலாந்து கடைசியில் 165/9 என்று முடிந்தது. ஆனால் ஆட்டம் வெற்றிகரமான டிரா, இந்தியாவைப் பொறுத்தவரையில் இழந்த வெற்றியாகும் இது. உலக டெஸ்ட் சாம்பியன் உண்மையில் சாம்பியன்கள் போல் ஆடினர், முதல் 2 மணி நேர ஆட்டத்தில் இந்திய அணி 31 ஓவர்கள் வீசியதில் 75 ரன்கள் எடுத்த நியூசிலாந்து விக்கெட்டுகள் எதையும் இழக்கவில்லை.
உணவு இடைவேளையிலிருந்து தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 125/4 என்ற நிலையில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி நெருக்கடியை அதிகரித்ததில் 30 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து 155/9 என்ற நிலையிலிருந்து ஏறத்தாழ 56 பந்துகளை ராச்சின் ரவீந்திரா (18 நாட் அவுட்), அஜாஜ் படேல் (2) ஆகியோர் ஆடி ஆட்டத்தை டிரா செய்தனர்.
இன்றைய தினத்துக்கான 90 ஓவர்கள் முடிந்தாலும் நேரம் இன்னும் 6-7 நிமிடங்கள் இருந்தன இன்னும் 2 ஓவர்கள் வீசியிருக்க முடியும் ஆனால் போதிய வெளிச்சமின்மை காரணமாக நடுவர் கேப்டன் ரகானேவிடம் விளக்க ஆட்டம் ட்ரா ஆனது. உண்மையில் 4 ஓவர்கள் இருக்கும் போதே லைட் இல்லை, ஆனால் மேகத்துக்குள் மறைந்திருந்த சூரியன் வெளியே வர ஆட்டம் தொடர்ந்தது முழு ஓவர்கள் வீசப்பட்டு விட்டன, ஆனால் டைம் முடியவில்லை, அதற்குள் வெளிச்சமின்மை ஏற்பட்டதால் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
முதல் செஷனில் விக்கெட்டே இல்லாமல் போனதுதான் ஆட்டம் ட்ரா ஆனதற்குக் காரணம். என்பதை விட நியூசிலாந்து வீரர் சோமர்வில், டாம் லேதம் அற்புதமாக ஆடினார். இதனால் விக்கெட் விழவில்லை. இந்தியா-நியூசிலாந்து இரு அணிகளும் தலா 4 புள்ளிகள் பெற்றன. ஆட்ட நாயகனாக ஷ்ரேயஸ் அய்யர் தேர்வு செய்யப்பட்டார்.
நியூசிலாந்து அணியில் டாம் லேதம் 146 பந்துகளில் 52, சோமர்வில், இவர் இரவு காவலன் 110 பந்துகள் ஆடி 36 ரன்கள். கேன் வில்லியம்சன் 112 பந்துகள் ஆடி 24 ரன்கள். கைலி ஜேமிசன் 30 பந்துகள் ஆடி 5 ரன்கள் என்றாலும் இன்றைய ஹீரோ ராச்சின் ரவீந்திரா 91 பந்துகளைச் சந்தித்து 18 ரன்களை எடுத்து சுவராக நின்றதில் அஜாஜ் படேலும் இணைந்து 23 பந்துகள் நின்றார். இன்று மொத்தம் வீசிய 540 பந்துகளில் 459 பந்துகளை டாம் லேதம், சோமர்வில், கேன் வில்லியம்சன் ராச்சின் ரவீந்திரா ஆகியோர் ஆடியதுதான் நியூசிலாந்து அணியின் உறுதியான டிராவுக்கான ஆட்டத்தின் ரகசியம் ஆகும். அடுத்த டெஸ்ட் போட்டி மும்பையில். அதற்கு விராட் கோலி வந்து விடுகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ajinkya Rahane, India vs New Zealand, Kane Williamson, Shreyas Iyer