• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • இதுவா அவருக்கு முதல் மேட்ச்?- நம்ப முடியலையே- கம்பீரை ஆச்சரியப்படுத்திய வீரர்

இதுவா அவருக்கு முதல் மேட்ச்?- நம்ப முடியலையே- கம்பீரை ஆச்சரியப்படுத்திய வீரர்

ஹர்ஷல் படேலை வாழ்த்தும் இந்திய அணி.

ஹர்ஷல் படேலை வாழ்த்தும் இந்திய அணி.

 • Share this:
  நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு கதவுத் தட்டல்களுக்குப் பிறகு ஹர்ஷல் படேல் நேற்று நியூசிலாந்துக்கு எதிராக அறிமுக டி20 போட்டியில் ராஞ்சியில் ஆடி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 180 ரன்கள் சென்றிருக்க வேண்டிய நியூசிலாந்து ஸ்கோர் 153 ரன்களுக்கு மட்டுப்பட பெரும் காரணமாகத் திகழ்ந்தார்.

  ஸ்லோயர் ஒன்களுடன் ஷார்ட் பிட்ச் பந்துகளை கலந்து கட்டி வீசியதோடு, கடும் பனிப்பொழிவிலும் சிறப்பாக வீசிய திறமைக்காக அறிமுகப் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார் ஹர்ஷல் படேல். இதனால் இவர் மீது பல முன்னாள் வீரர்களும் நம்பிக்கை வைத்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.

  ஒருநாள் போட்டிகளுக்கும் எடுத்தால், பாகிஸ்தானின் ஹசன் அலி வந்த புதிதில் மிடில் ஓவர்களைக் கட்டுப்படுத்துவதில் தாதாவாக இருந்தது போல் இவரும் உருவாகி அதையும் கடந்து செல்லக்கூடிய திறமை படைத்தவர் ஹர்ஷல் படேல்.

  இந்நிலையில் கவுதம் கம்பீர், ஹர்ஷல் படேலைப் பாராட்டிக் கூறும்போது, “ஹர்ஷல் படேல் நம்ப முடியாத பவுலிங். முதல் போட்டியில் ஆடுபவர் போலவே வீசவில்லை. அவர் பவுலிங் என்னை வெகுவாகக் கவர்ந்தது. 8-10 ஆண்டுகள் முதல் தர கிரிக்கெட்டும், விலைமதிப்பற்ற ஐபிஎல் கிரிக்கெட்டும் கொடுக்கும் கொடையாகும்.

  முதல் போட்டியில் இந்தியாவுக்காக ஆடுகிறார், ஆனால் அவருக்கு தன் ஆட்டம் பற்றி நன்கு தெரிந்திருந்தது. உயர் தர ஐபிஎல் கிரிக்கெட்டில் கலக்க முடியும் போது சர்வதேச கிரிக்கெட்டிலும் கலக்கலாம். அங்கு அப்படிப்பட்ட வெற்றியை அவர் கண்டடைந்த போது இங்கு வரும்போது அதையே தொடர முடியும் என்று நம்புவதற்கான உறுதி ஏற்படும்.

  ஹர்ஷல் படேல் இன்று இதைத்தான் செய்துள்ளார். அவருக்காக மகிழ்கிறேன், பெரிய அரங்கில் அவர் தன்னை நிரூபித்துள்ளார் என்றார் கவுதம் கம்பீர்.

  ஹர்ஷல் படேல் ஆட்ட நாயகன் விருது பெற்ற பிறகு கூறும்போது, “நாட்டுக்காக ஆடுவது முற்றிலும் வேறு ஒரு உணர்வு. நாட்டுக்காக ஆடுவதுதான் எந்த ஒரு வீரரின் உடனடி இலக்காக இருக்க முடியும். இது மிகப்பெரிய கவுரவம். ஆனால் கிடைத்த வாய்ப்பை உத்தரவாதமாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.

  ராகுல் திராவிட் சார் சொல்வது போல் தயாரிப்புகளில் சிறப்பாக செயல்பட்ட பிறகே களத்தில் இறங்கி ஆட்டத்தை மகிழ்வுடன் ஆடவேண்டும். நல்ல ஐபிஎல் தொடர் அமைந்த பின்புலத்தில் இங்கு வந்தேன். எனவே திருப்தி கரமாக உள்ளது.” என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: