Home /News /sports /

ஜெயந்த் யாதவை நினைவிருக்கிறதா? 9-ம் நிலையில் சதம் அடித்து சாதித்தவர்- கோலியுடன் சாதனைக் கூட்டணி

ஜெயந்த் யாதவை நினைவிருக்கிறதா? 9-ம் நிலையில் சதம் அடித்து சாதித்தவர்- கோலியுடன் சாதனைக் கூட்டணி

கோலி-ஜெயந்த் யாதவ் 2016 241 ரன்கள் கூட்டணி அமைத்த போது, கோலி 235, ஜெயந்த் யாதவ் 104.

கோலி-ஜெயந்த் யாதவ் 2016 241 ரன்கள் கூட்டணி அமைத்த போது, கோலி 235, ஜெயந்த் யாதவ் 104.

மும்பை டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஜடேஜவுக்குப் பதில் அணியில் தேர்வு செய்யப்பட்ட ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர் ஜெயந்த் யாதவ் இதே மும்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 2016-ல் 9ம் நிலையில் இறங்கி 104 ரன்கள் என்று சதமெடுத்து சாதனை புரிந்தார்.

மேலும் படிக்கவும் ...
    மும்பை டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஜடேஜவுக்குப் பதில் அணியில் தேர்வு செய்யப்பட்ட ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர் ஜெயந்த் யாதவ் இதே மும்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 2016-ல் 9ம் நிலையில் இறங்கி 104 ரன்கள் என்று சதமெடுத்து சாதனை புரிந்தார். அதே இன்னிங்ஸில் இந்திய கேப்டன் விராட் கோலி அசைக்க முடியா நிலைக்குச் சென்று 235 ரன்களை விளாச, இவரும் ஜெயந்த் யாதவும் இணைந்து 241 ரன்களை 8வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

    ஆண்டர்சன், வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, ஆதில் ரஷீத் கொண்ட அந்த பந்து வீச்சுக்கு எதிராக 9ம் நிலையில் இறங்கிய ஜெயந்த் யாதவ் 204 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்தார். 9-ம் நிலையில் இறங்கி சதம் கண்ட முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் ஜெயந்த் யாதவ். இதே டெஸ்ட்டில் முரளி விஜய் 136 ரன்களை எடுக்க விராட் கோலி 340 பந்துகளில் 25 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 235 ரன்கள் எடுக்க இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்கு எதிராக இந்திய அணி 631 ரன்களை 182.3 ஓவர்களில் குவித்தது.

    231 ரன்கள் பின் தங்கிய இங்கிலாந்து அணி தன் 2வது இன்னிங்ஸில் அஸ்வினின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளைக் கொடுத்தது போல் 2வது இன்னிங்சிலும் அஸ்வினிடம் 6 விக்கெட்டுகளைக் கொடுத்து 195 ரன்களுக்குச் சுருண்டது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 3-0 என்று முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியது.

    ஆனால் பவுலிங்குக்காக எடுக்கப் பட்ட ஜெயந்த் யாதவ் விக்கெட் எடுக்காமல் 89 ரன்களை விட்டுகொடுத்தார், 2வது இன்னிங்ஸில் 6 ஓவர் 39 ரன் 1 விக்கெட் என்று முடிந்தார், பேட்டிங்குக்காக ஒரு ஸ்பின்னரை அணியில் வைத்திருக்க முடியாது என்பதனால் தொடர்ந்து வாய்ப்பு அளிக்க முடியவில்லை. அந்த ஜெயந்த் யாதவ்தான் இப்போது இந்திய அணியில் மீண்டும் அதுவும் அதே மும்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இது தற்செயல் என்றால் இந்த முறையாவது பவுலிங்கில் அவர் சிறப்பாக வீசி பேட்டிங்கிலும் பயனுள்ள ரன்களை அடித்து அணியில் நிரந்தர இடம்பிடிப்பாரா என்று பார்க்க வேண்டும். இப்போது நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 25/0 என்று ஆடிவருகிறது. கைல் ஜேமிசனை ஒரே ஓவரில் ஷுப்மன் கில் 3 பவுண்டரிகள் விளாசினார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, India vs New Zealand, Virat Kohli

    அடுத்த செய்தி