ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

7 பவுலர்களை அழைத்து செல்லுங்கள்.. இந்தியா தோல்விக்கு பின் கேலி செய்த முன்னாள் கேப்டன்

7 பவுலர்களை அழைத்து செல்லுங்கள்.. இந்தியா தோல்விக்கு பின் கேலி செய்த முன்னாள் கேப்டன்

Ind vs NZ

Ind vs NZ

India vs New Zealand | இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நியூசிலாந்து அணிக்கு டி20 தொடரில் பாண்டிய தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் ஒரு நாள் தொடரின் முதல் போட்டி ஆக்லாந் மைதானத்தில் இன்று தொடங்கியது. ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது.

  இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ல் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்களை எடுத்தது. கேப்டன் ஷிகர் தவான் (72) , சுப்மான் கில் (50) ஸ்ரேயாஸ் ஐயர் (80) ரன்களை சேர்த்திருந்தனர் நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி மற்றும் பெர்குசன் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

  இதையடுத்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிதானமாக விளையாடியது. ஆரம்பத்தில் இந்திய அணியின் வேகத்தில் தடுமாறிய நியூசிலாந்து ஃபின் ஆலன், டெவோன் கான்வே, மிட்சல் விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லாதம் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் நியூசிலாந்து 47.1 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. கேன் வில்லியம்சன் 94 மற்றும் டாம் லாதம் 145 ரன்கள் உடன் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

  Also Read : ஆல் ஏரியாவிலும் தல தோனியின் ஃபீவர் தான் : கத்தார் உலகக்கோப்பையில் சிஎஸ்கே ரசிகர்கள்!

  இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் எடுத்தும் நியூசிலாந்து வெற்றி பெறுவது இது இரண்டாவது முறையாகும். நியூசிலாந்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த லாதமுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. 300 ரன்கள் அடித்தும் தோல்வியடைந்த இந்திய அணி விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

  இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தனது ட்விட்டரில், நியூசிலாந்து அணி நீங்கள் நன்றாக விளையாடினார்கள். 300 ரன்கள் இலக்கை 270 ரன்போல் சேஸ் செய்தனர்.. வில்லியம்சன் வழக்கம் போல் கிளாஸ் பேட்டிங் செய்தார், ஆனால் லாதம் ஆட்டத்தால் கொள்ளை கொண்டார். எந்த ஒரு தொடக்க ஆட்டக்காரரும் குறைந்த வரிசையில் பேட் செய்து வெற்றியை அடைவது எளிதல்ல. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்தது. இங்கே அவர்கள் ஒரு பெரிய தவறு செய்தார்கள் என்றார்.

  இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் எழுதுகையில், அவர்கள் (நியூசிலாந்து) தற்போது சிறந்த ODI அணி. உங்களுக்கு 7 பந்துவீச்சாளர்கள் இருந்தால் குறைந்தது ஆறு பவுலர்கள் விளையாட முடியும் என்றுள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Ind vs NZ