#NZvIND | இந்தியாவின் வெற்றியும்... நியூசிலாந்து அணியின் சொதப்பலும்...!

#NZvIND | இந்தியாவின் வெற்றியும்... நியூசிலாந்து அணியின் சொதப்பலும்...!
நியூசிலாந்து அணி
  • News18
  • Last Updated: January 25, 2020, 11:24 AM IST
  • Share this:
எப்போதும் பீல்டிங்கில் கலக்கும் நியூசிலாந்து இந்தமுறை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அதில் கோட்டை விட்டதால் தோல்வியை சந்தித்துள்ளது

ஆக்லாந்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டி20 தொடரின் முதல் போட்டியில், பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டது நியூசிலாந்து. குறிப்பாக பார்மில் இருக்கும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ராகுலை ரன் அவுட் செய்ய கிடைத்த வாய்ப்பை, இருமுறை தவறவிட்டது, அந்த அணிக்கு பலத்த பின்னடைவாக அமைந்தது.

இந்திய அணி தனது இன்னிங்ஸை தொடங்கிய ஆறாவது ஓவரின் முதல் பந்தை நியூசிலாந்து அணியின் ஹமீத் பென்னட் வீச அதை எதிர்கொண்ட ராகுல் பந்தை கவர் திசையில் தட்டிவிட்டு ஓட முயன்றபோது எதிரில் நான்-ஸ்டிரைக்கரில் இருந்த விராட் கோலியுடன் ஏற்பட்ட குழப்பத்தால், ரன் எடுக்க ஓடி பாதியில் நின்றுவிட்டார்.


அப்போது பந்து நியூஸி அணியின் வீரான சவுதியின் கையில் தஞ்சம் புக, ராகுலை ரன் அவுட் செய்த கிடைத்த அந்த வாய்ப்பை தவறான த்ரோ மூலம் தவறவிட்டார் அவர். இருந்தபோதிலும் இன்னும் ராகுல் கிரீசை அடையாததால், சவுதி எரிந்த பந்தை சேகரித்த நியூசிலாந்து வீரர்கள் திரும்பவும் ராகுலை ரன் அவுட் செய்ய முயற்சி மேற்கொண்டனர். இருந்த போதிலும் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது.

வழக்கமாக நியூலாந்து அணி பீல்டிங்கில் பின்னியெடுக்கும் என்பது கிரிக்கெட் தெரிந்த அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியது . உதாரணத்திற்கு அந்த அணியின் முன்னாள் கேப்டனான் பிரண்டென் மெக்கல்லம் ஆகட்டும், இல்லை தற்போது அணியின் தொடக்க ஆட்டக்காரராக செயல்படும் குப்தில் ஆகட்டும், இவர்கள் எல்லாம் கிரிக்கெட் உலகின் சிறந்த பீல்டர்களில் சிலராவர்.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் நியூசிலாந்து வீரர்கள், பீல்டிங்கில் திணறியது மைதானத்தில் இருந்த அந்த அணியின் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இப்படி அதிர்ஷ்டவசமாக கண்டத்தில் இருந்து தப்பித்ததால் சுதாரித்துக்கொண்ட ராகுலும் 27பந்துகளில் 59 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். முன்னதாக ரோகித்துடன் சேர்ந்து இந்திய அணியின் பேட்டிங்கை தொடங்கிய போதும், அவர் இரண்டாவது விக்கெட்டுக்கு கோலியுடன் அமைத்த 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் நல்ல அடித்தளமாக அமைந்தது. ராகுல் ஆட்டமிழந்த பின்னர் களமிறங்கிய ஷ்ரேஸ் ஐயரின் மிரட்டலான ஆட்டமும் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது. அவர் 29 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார்.

முன்னதாக டாஸ் வென்று களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 203 ரன்கள் குவித்தது. அடுத்த போட்டியில் அந்த அணி தனது தவறுகளை சரிசெய்து நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு வலுவான நெருக்கடியை கொடுக்கும் என்பதே அந்த அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
First published: January 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading