Home /News /sports /

‘ஷுப்மன் கில் இப்படியெல்லாம் ஆடினா, LBW ஆளுன்னு முடிவு கட்டிடுவாங்க’

‘ஷுப்மன் கில் இப்படியெல்லாம் ஆடினா, LBW ஆளுன்னு முடிவு கட்டிடுவாங்க’

கில் பவுல்டு

கில் பவுல்டு

கில் அதனால்தான் வெளியே ஸ்விங் ஆகும் பந்துகளுக்கு நன்றாக ஆடுகிறார், ஆனால் ஃபுல்லெந்தில் உள்ளே வரும்போது அவர் மட்டை ஒரு பக்கம், கால்காப்பு ஒருபக்கமுமாக உள்ளது என்பதை வாசிம் ஜாஃபர் அழகாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

    உயர்மட்ட கிரிக்கெட் ஆட்டமான டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சக்சஸ் ஆகவேண்டுமெனில் ஷுப்மன் கில் இன்னும் கொஞ்சம் அவரது பேட்டிங் டெக்னிக்கை அவர் கூர்மை படுத்த வேண்டும் செழுமையாக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய டெஸ்ட் வீரரும், ரஞ்சி கிரிக்கெட் முடிசூடா மன்னனுமான வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

    நேற்று நியூசிலாந்துக்கு எதிராக கான்பூர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பிரமாதமாக 52 ரன்கள் எடுத்த ஷுப்மன் கில் அதை சதமாக மாற்ற 5வது முறையாக தவற விட்டுள்ளார். கைல் ஜேமிசன் பந்து ஒன்று உள்ளே வர கிரீசிலிருந்தே அவர் ஆட முற்பட்டு கால்காப்புக்கும் மட்டைக்கும் கேப் விட்டதால் பிளேய்ட் ஆன் ஆகி வெளியேறினார்.

    இந்நிலையில் வாசிம் ஜாஃபர் கூறும் அறிவுரையைப் பார்ப்போம்: “ஷுப்மன் கில் எல்லா பந்துகளையும் பின்னால் சென்று கிரீசுக்குள் மிகவும் உள்ளே சென்று ஆடுகிறார். இதனால் அவர் எல்.பி.டபிள்யூ ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அவர் ஃபுல் லெந்த் பந்துகளுக்கு தயாராக இருக்க வேண்டும். கிரீசிற்குள் அவர் மிகவும் உள்ளே சென்று ஆடுவதால் முன்னால் வந்து ஆடுவதில் அவருக்கு சிக்கல் இருக்கிறது.

    ஃபுல் லெந்த் பந்தை ஆடும்போது அவரது தலை, கால் ஒரே திசையில் பந்தின் திசை நோக்கி முன்னால் வர வேண்டும், பிறகு மட்டையை பந்தின் மேல் செலுத்த வேண்டும். ஆனால் அவர் சில வேளைகளில் ஃபுல் லெந்த் பந்துகளுக்கும் பின்னால் செல்கிறார். பிறகு பந்தின் மீது பேட்டை மட்டும் வீசுகிறார். இது தேவையற்ற உத்தி.

    அவர் ஃபுல் பந்துகளுக்கு தயாராக இருக்க வேண்டும், ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் இறங்குகிறார், ஜூனியர் கிரிக்கெட் நெடுக அவர் தொடக்கத்தில்தான் இறங்குகிறார். எனவே அவர் மிடில் ஆர்டரில் ஆட வேண்டுமெனில் இந்த ஒரு விஷயத்தை அவர் சரி செய்ய வேண்டும். ஏனெனில் சர்வதேச பவுலர்கள் இந்த லெந்தில்தான் அதிகம் வீசுவார்கள்” என்று ஷுப்மன் கில்லிடம் மாற்ற வேண்டிய டெக்னிக்கைப் பற்றி கூறினார்.

    கில் அதனால்தான் வெளியே ஸ்விங் ஆகும் பந்துகளுக்கு நன்றாக ஆடுகிறார், ஆனால் ஃபுல்லெந்தில் உள்ளே வரும்போது அவர் மட்டை ஒரு பக்கம், கால்காப்பு ஒருபக்கமுமாக உள்ளது என்பதை வாசிம் ஜாஃபர் அழகாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: First test cricket match, India

    அடுத்த செய்தி