ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

நியூசிலாந்தின் கோட்டையில் இந்தியா.. குறுக்கிடாத மழை.. வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி!

நியூசிலாந்தின் கோட்டையில் இந்தியா.. குறுக்கிடாத மழை.. வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி!

கிரிக்கெட்

கிரிக்கெட்

India vs New Zealand 3rd ODI : கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 11 போட்டிகளில் நியூசிலாந்து 10 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இழக்காமல் இருக்க, மூன்றாவது ஒரு நாள் போட்டியில், வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, முதலில் நடைபெற்ற டி-20 தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து, 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில், ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்றது. பின்னர், ஹாமில்டனில் நடைபெற்ற 2-வது போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், 3-வது மற்றும் கடைசிப் போட்டி கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஒன்றுக்கு பூஜ்ஜியம் என நியூசிலாந்து முன்னிலையில் உள்ளதால், தொடரை இழக்காமல் இருக்க இன்றைய போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மேலும், கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 11 போட்டிகளில் நியூசிலாந்து 10 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது. எனவே, நியூசிலாந்தின் கோட்டையாக பார்க்கப்படும் கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இந்தியா சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே, மழை பெய்யக்கூடும் என எதிர்பார்த்த நிலையில் மூன்றாவது போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து டாஸ் வென்ற நிலையில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

First published:

Tags: Cricket