இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி, மவுண்ட் மன்குனாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 ஒரு நாள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. நேப்பியரில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இன்று 2-வது ஒரு நாள் போட்டி மவுண்ட் மன்குனாய் மைதானத்தில் நடந்து வருகிறது.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. 25 ஓவர் முடிவில் 154 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தலா அரை சதம் விளாசியுள்ளனர்.
Published by:Yuvaraj V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.