• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டெஸ்ட் தொடரிலிருந்து கே.எல்.ராகுல் திடீர் விலகல்- சூரியகுமார் யாதவ் சேர்ப்பு

டெஸ்ட் தொடரிலிருந்து கே.எல்.ராகுல் திடீர் விலகல்- சூரியகுமார் யாதவ் சேர்ப்பு

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

நியூசிலாந்து அணிக்கு எதிராக 25ம் தேதி வியாழனன்று தொடங்கும் டெஸ்ட் தொடரிலிருந்து தொடக்க வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

  • Share this:
    இங்கிலாந்துக்கு சென்ற டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த சூரியகுமார் யாதவ் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கே.எல்.ராகுலின் இடது தொடையில் தசையில் காயம் ஏற்பட்டதால் அவர் விலகியதாக பிசிசிஐ தரப்பு கூறியுள்ளது.

    இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திகளின்படி கே.எல்.ராகுல் பயிற்சி அமர்விலிருந்து விலகியுள்ளார். மேலும் பயிற்சியில் ஷுப்மன் கில், மாயங்க் அகர்வால் ஆகியோர் இறங்கி பயிற்சி மேற்கொண்டனர். ஏற்கெனவே புஜாரா கூறும்போது ஷுப்மன் கில் நிச்சயம் ஆடுவார், ஆனால் எந்த டவுன் என்று இப்போது நான் வெளியிடமாட்டேன் என்று கூறியிருந்தார்.

    இதனையடுத்து ஷ்ரேயஸ் அய்யர் தன் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது, சூரிய குமார் யாதவ் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் நன்றாக ஆடினார். இதனையடுத்து அவரை அணியில் சேர்த்துள்ளனர்.



    இந்திய அணி வருமாறு: ரகானே, ஷுப்மன் கில், மாயங்க் அகர்வால், புஜாரா, ஷ்ரேயஸ் அய்யர், விருத்திமான் சகா, ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல், உமேஷ் யாதவ், சிராஜ்.

    இந்திய அணியில் மூத்த வீரர்கள் இல்லாமலேயே ஆஸ்திரேலியாவில் போய் அந்த அணியை மண்ணைக்கவ்வச் செய்த அஜிங்கிய ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. நியூசிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவு டெவன் கான்வே என்ற அதியற்புத டெஸ்ட் வீரரும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு குடைச்சல் கொடுக்கும் இடது கை வேகப்பந்து வீச்சாலர் ட்ரெண்ட் போல்ட் இல்லாதது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: