ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

INDvsNZ | 21 ஆண்டுகளுக்கு பின் விக்கெட் கீப்பிங்கில் டிராவிட் சாதனையை நிகழ்த்திய கே.எல்.ராகுல்..! தோனி கூட மிஸ்ஸிங்

INDvsNZ | 21 ஆண்டுகளுக்கு பின் விக்கெட் கீப்பிங்கில் டிராவிட் சாதனையை நிகழ்த்திய கே.எல்.ராகுல்..! தோனி கூட மிஸ்ஸிங்

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் 112 ரன்கள் விளாசி சர்வதேச ஒரு நாள் போட்டியில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார்.

இந்தியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது. இந்தியாவிற்கு எதிரான 3-வது மற்றும் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Also Read : #INDvsNZ | ஒரு நாள் தொடரில் இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்து பழிதீர்த்த நியூசிலாந்து..!

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 112 ரன்கள் விளாசினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் சதமடித்தன் மூலம் ராகுல் டிராவிட்டின் 21 ஆண்டுக்கால சாதனையை பகிர்ந்து கொண்டார்.

இந்திய விக்கெட் கீப்பர்களில் ஆசியாவில் இல்லாத ஒரு நாட்டில் சதமடித்த 2வது வீரர் கே.எல்.ராகுல் என்ற பெருமையை பெற்றுள்ளார். ராகுல் டிராவிட் ஒரு நாள் போட்டிகளில் முழுநேர விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற 1999 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டிராவிட் 145 ரன்கள் எடுத்திருந்தார். இதுவே இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் ஆசியா இல்லாத நாட்டில் அடித்த முதல் சதமாகும்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆசிய கண்டத்தில் இல்லாத பிற நாடுகளில் சதமடித்தது இல்லை. 21 வருடங்கள் கழித்து தற்போது கே.எல்.ராகுல் நியூசிலாந்தில் சதமடித்து ராகுல் டிராவிட் சாதனையில் இணைந்துள்ளார்.

Also Read : Ind vs NZ | விக்கெட் கீப்பராக தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

First published:

Tags: Cricket, Ind vs NZ, Kl rahul