Home /News /sports /

ஒருநாள் தொடரைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்தது இந்தியா...!

ஒருநாள் தொடரைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரையும் முழுமையாக இழந்தது இந்தியா...!

India vs New Zealand | Live Score

India vs New Zealand | Live Score

India vs New Zealand | Live Score

  • News18
  • Last Updated :
    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியா இழந்த நிலையில், டெஸ்ட் தொடரையும் இழந்தது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது.

    இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 242 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பிரித்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி அரைசதம் அடித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 73.1 ஓவர்களில் 235 ரன்களுக்கு அடங்கியது. முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    அடுத்து 7 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பினர். இதனால், இந்திய அணி 46 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 132 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதையடுத்து, பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் இழந்தது.

    ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது நினைவிருக்கலாம். நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியிருந்தது.
    Published by:Sankar
    First published:

    Tags: Ind vs NZ

    அடுத்த செய்தி