• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஷ்ரேயஸ் அய்யர் டெஸ்ட்டில் சக்சஸ் ஆவாரா?- மாஸ் காட்டும் புள்ளி விவரம்

ஷ்ரேயஸ் அய்யர் டெஸ்ட்டில் சக்சஸ் ஆவாரா?- மாஸ் காட்டும் புள்ளி விவரம்

லெஜண்ட் சுனில் கவாஸ்கரிடமிருந்து கேப் பெற்ற ஷ்ரேயஸ் அய்யர்.

லெஜண்ட் சுனில் கவாஸ்கரிடமிருந்து கேப் பெற்ற ஷ்ரேயஸ் அய்யர்.

54 முதல் தரப் போட்டிகளில் 4,591 ரன்கள் எடுத்து 52.18 என்ற சராசரி வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட்டும் 81.54 என்று சிகப்புப் பந்தில் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். ஒரு இரட்டைச் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்ததோடு 12 சதங்களை எடுத்துள்ளார் ஷ்ரேயஸ் அய்யர்.

  • Share this:
    நியூசிலாந்துக்கு எதிராக கான்பூர் டெஸ்ட்டில் ஷ்ரேயஸ் அய்யரின் கனவு நிறைவேறியது இந்திய லெஜண்ட் சுனில் கவாஸ்கரிடமிருந்து இந்திய அணியின் தொப்பியை பெறும் கவுரவம் பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

    முன்பு இந்தியா-ஏ அணியின் கேப்டனாக ராகுல் திராவிட்டுடன் இணைந்து பணியாற்றியுள்ளார், கற்றுக் கொண்டுள்ளார் ஷ்ரேயஸ் அய்யர். இவர் 2014-ல் மும்பைக்காக ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் இவர் 2 ரன்களையே எடுக்க காஷ்மீர் அணியிடம் மும்பை அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

    இப்படி ஸ்டார்ட் ஆனாலும் அதே சீசனில் 10 மேட்ச்களில் 809 ரன்களை எடுத்தார் அய்யர். சராசரி 50.56. அடுத்த சீசனில் பெரிய ஆளாக எழுச்சி பெற்ற ஷ்ரேயஸ் அய்யர் 11 ரஞ்சி போட்டிகளில் 1321 ரன்களை எடுத்து அந்த சீசனில் ஆயிரம் ரன்களைக் கடந்த ஒரே இந்திய வீரர் ஆனார். விவிஎஸ் லஷ்மண் தான் ஒரே சீசனில் 1415 ரன்களை 1999-2000 சீசனில் எடுத்து இன்று வரை அதுதான் சாதனையாக இருந்து வருகிறது.

    அடுத்த சீசனில் 10 மேட்ச்களில் 725 ரன்களை விளாசிய ஷ்ரேயஸ் அய்யர். இந்தியா ஏ அணியில் நுழைந்தார், ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியா வந்த போது டூர் மேட்சில் 210 பந்துகளில் 202 ரன்கள் விளாசினார். நேதன் லயன், ஸ்டீவ் ஓ’கீஃப் எல்லாம் ஆஸ்திரேலிய லைன் அப்பில் இருந்தனர். டெஸ்ட் அணிக்கு ஒரு மாதம் சென்று நுழைந்தார் அய்யர்.

    54 முதல் தரப் போட்டிகளில் 4,591 ரன்கள் எடுத்து 52.18 என்ற சராசரி வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட்டும் 81.54 என்று சிகப்புப் பந்தில் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். ஒரு இரட்டைச் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்ததோடு 12 சதங்களை எடுத்துள்ளார்.

    Also Read: IND vs NZ | வலைப்பயிற்சியில் பவுலிங் போட்ட ராகுல் திராவிட்- வைரல் வீடியோ

    இந்நிலையில் கான்பூரில் தன் சிகப்புப் பந்து கிரிக்கெட்டைத் தொடங்கிய ஷ்ரேயஸ் அய்யர் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இதே மைதானத்தில் அறிமுகமாகியுள்ளார். ஆக்ரோஷமான வீரர்.  இப்போது கான்பூரில் டாஸ் வென்று ஆடி வருகிறது இந்திய அணி. என்ன செய்கிறார் ஷ்ரேயஸ் அய்யர் என்பதைப்பார்ப்போம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: