இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக 2-வது டெஸ்டில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால் தொடரை இழக்கும் என்பதால் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் மூத்த வீரர் இஷாந்த சர்மா பயிற்சியில் ஈடுபடவில்லை. கணுக்கால் காயம் காரணமாக அவர் பயிற்சியில் ஈடுபடவில்லை என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர் 2-வது டெஸ்டில் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். பும்ரா, ஷமியின் வேகம் ஈடுபடாத நிலையில் இஷாந்த சர்மா தனி ஒருவராக போராடி 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். 2-வது டெஸ்டில் இஷாந்த் சர்மா விலகினால் இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.