ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

15 ரன்களுக்கு 5 விக்.இழப்பு… நியூசிலாந்தை சிதறடித்த இந்திய பவுலர்கள்…

15 ரன்களுக்கு 5 விக்.இழப்பு… நியூசிலாந்தை சிதறடித்த இந்திய பவுலர்கள்…

விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய பவுலர்கள்

விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய பவுலர்கள்

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி விடும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அணி 15 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் இந்திய பவுலர்கள் அற்புதமாக பந்து வீசி நியூசிலாந்து விக்கெட்டுகளை சிதறடித்துள்ளனர். முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் பரபரப்பான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங்கில் மிரட்டிய சூழலில், இன்று டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை முதலில் தேர்வு செய்தார்.

இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் – டெவோன் கான்வே களத்தில் இறங்கினர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் 5வது பந்தில் போல்டாகி ஃபின் ஆலன் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஹென்றி நிகோலஸ் களத்தில் இறங்கி விக்கெட்டை காப்பாற்றுவதற்காக நிதானமாக விளையாடினார். 20 பந்துகளில் 2 ரன்கள் எடுத்திருந்தபோது, சிராஜ் பந்துவீச்சில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து அவரும் வெளியேறினார். 7ஆவது ஓவரை ஷமி வீசியபோது களத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் டேரில் மிட்ச்செல் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இன்னொரு தொடக்க வீரர் டெவோன் கான்வே, ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

விக்கெட்டுகள் மளமளவென விழுந்த நிலையில் கேப்டன் டாம் லாதம் சரிவை சரி செய்ய போராடினார். 17 பந்துகளை சந்தித்த அவர் 1 ரன் எடுத்து ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 10.3 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 15 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. இந்திய அணி தரப்பில் பவுலர்கள் முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மேட்ச்சில் விளையாடிய சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் முகம்மது ஷமி மற்றும் முகம்மது சிராஜுடன் ரோஹித் சர்மா களமிறங்கியுள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி விடும்.

First published:

Tags: Cricket