இந்தியா - நியூசிலாந்து மோதும் போட்டியின் நடுவர்கள் இவர்கள் தான்! ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியா - நியூசிலாந்து மோதும் போட்டியின் நடுவர்கள் இவர்கள் தான்! ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ICC World Cup 2019
  • News18
  • Last Updated: July 7, 2019, 9:10 PM IST
  • Share this:
உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் முன்னேறி உள்ளன.

முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் வரும் 9ம் தேதி பலப்பரீட்சை நடத்துகிறது. 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் ஜூலை 11ம் தேதி மோதுகின்றன.

இந்தியா - நியூசிலாந்து மோதும் முதல் அரையிறுதிப் போட்டிக்கு நடுவர்களாக இங்கிலாந்தின் ரிச்சர்ட் இல்லிங்க்வோர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டல்பரோ நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது நடுவராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ராட் டக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.


போட்டியின் ரெஃப்ரியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் பூன் செயல்படுவார் என ஐசிசி தெரிவித்துள்ளது. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் 2வது அரையிறுதிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த தர்மசேனா மற்றும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மார்ஷ் ஈராஸ்மஸ் நடுவர்களாக செயல்படுவர்கள்.

மூன்றாவது நடுவராக நியூசிலாந்தின் கிறிஸ் கேஃப்னே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியின் ரெஃப்ரியாக இலங்கையை சேர்ந்த ரஞ்சன் மதுகல செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Watch
First published: July 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்