• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • India vs NZ| இந்தியா-நியூசிலாந்து தொடர்: மும்பை வான்கடேயில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி

India vs NZ| இந்தியா-நியூசிலாந்து தொடர்: மும்பை வான்கடேயில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி

மும்பை வான்கடேயில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி

மும்பை வான்கடேயில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி

  • Share this:
    டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு நியூசிலாந்து அணி நேரடியாக இந்தியா வந்திறங்கி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. மும்பையில் டிசம்பர் 3ம் தேதி 2வது இறுதி டெஸ்ட் நடைபெறுகிறது, இந்தப் போட்டியைக் காண 100% ரசிகர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

    மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் வான்கடேயில் அனைத்து இருக்கைகளையும் பூர்த்தி செய்துக் கொள்ளலாம் என்று மகாராஷ்டிரா அரசு அனுமதியளித்துள்ளது. மேலும் மும்பை கிரிக்கெட் அகாடமியின் பந்த்ரா-குர்லா வளாகத்தில் இந்திய டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டுகளுக்கு சிறப்பு முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு இந்த டெஸ்ட் போட்டிக்கு வான்கடே மைதானம் முழுதும் இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என்று அனுமதியளித்துள்ளதை மும்பை கிரிக்கெட் சங்கமும் உறுதி செய்துள்ளது.

    நாளை மறுநால் ஜெய்பூரில் முதல் டி20 போட்டி மாலை 7:00 மணிக்குத் தொடங்குகிறது. கேன் வில்லியம்சன் தலைமை நியூசிலாந்தும் ரோகித் சர்மா தலைமை இந்தியாவும் மோதுகின்றன. இந்திய அணியில் விராட் கோலி, பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    ராஞ்சியில் 19ம் தேதி 2வது டி20 போட்டியும், 21ம் தேதி கொல்கத்தாவில் 3வது டி20 போட்டியும் நடைபெறுகிறது. நவம்பர் 25-29-ல் கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது, டிசம்பர் 3-7 மும்பை வான்கடேயில் 2வது இறுதி டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

    இந்திய டெஸ்ட் அணி வருமாறு: ரகானே (கேப்டன்), புஜாரா (துணைக் கேப்டன்), ராகுல், மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர், விருத்திமான் சகா, கே.எஸ்.பரத், ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசீத் கிருஷ்ணா.

    இந்திய டி20 அணி வருமாறு: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், அஸ்வின், ஆவேஷ் கான், செகல், தீபக் சாகர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், வெங்கடேஷ் அய்யர், ஷ்ரேயஸ் அய்யர், புவனேஷ்வர் குமார், சிராஜ், ரிஷப் பண்ட், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், சூரியகுமார் யாதவ்.

    நியூசிலாந்து டெஸ்ட் அணி: கேன் வில்லியம்சன், டாம் பிளண்டெல், கைல் ஜேமிசன், டாம் லேதம், ஹென்றி நிகோல்ஸ், அஜாஜ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், சோமர்வில், டிம் சவுதி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், வில் யங்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: