Shreyas Iyer: வரலாறு படைத்தார் ஷ்ரேயஸ் அய்யர்- முதல் டெஸ்ட்டிலேயே சதமடித்து சாதனை
Shreyas Iyer: வரலாறு படைத்தார் ஷ்ரேயஸ் அய்யர்- முதல் டெஸ்ட்டிலேயே சதமடித்து சாதனை
அறிமுக அசத்தல் ஷ்ரேயஸ் அய்யர் சதம்-கான்பூர் டெஸ்ட்
கான்பூர் டெஸ்ட் போட்டியில் தன் அறிமுக டெஸ்ட்டில் ஆடும் ஷ்ரேயஸ் அய்யர் முதல் டெஸ்ட்டிலேயே சதம் அடித்து வரலாறு படைத்தார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் கண்ட 16-வது இந்திய வீரர் ஆனார் ஷ்ரேயஸ் அய்யர்.
கான்பூர் டெஸ்ட் போட்டியில் தன் அறிமுக டெஸ்ட்டில் ஆடும் ஷ்ரேயஸ் அய்யர் முதல் டெஸ்ட்டிலேயே சதம் அடித்து வரலாறு படைத்தார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் கண்ட 16-வது இந்திய வீரர் ஆனார் ஷ்ரேயஸ் அய்யர்.
இதற்கு முன்பாக, முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் கண்ட 15 இந்திய வீரர்கள் பட்டியல் இதோ: லாலா அமர்நாத், தீபக் ஷோடான், அர்ஜுன் கிரிபால் சிங், அப்பாஸ் அலி பெய்க், ஹனுமந்த் சிங், குண்டப்பா விஸ்வநாத், சுரேந்திர அமர்நாத் (மொகீந்தர் அமர்நாத்தின் சகோதரர்), மொகமது அசாருதீன், பிரவீன் ஆம்ரே, சவுரவ் கங்குலி, விரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ரோகித் சர்மா, பிரிதிவி ஷா.
இன்று காலை இறங்கியவுடனேயே ஷ்ரேயஸ் அய்யர் கைல் ஜேமிசனை 2 பவுண்டரிகள் அடித்தார். இந்த இரண்டாவது ஷாட் அருமையான டச் ஷாட், கல்லி, பாயிண்டுக்கு இடையே பவுண்டரி பறந்தது. அதன் பிறகு ஜேமிசனை 3 பவுண்டரி அடித்து 90களுக்குள் புகுந்து 96 ரன்களுக்கு வந்தவர். கடைசியில் ஜேமிசன் பந்தைத்தான் 2 ரன்கள் எடுத்து அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் கண்டார்.
அருமையான இந்த இன்னிங்சில் 159 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது.
கான்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1969-ம் ஆண்டு லெஜண்ட் குண்டப்பா விஸ்வநாத் தன் முதல் டெஸ்ட்டிலேயே 137 ரன்கள் எடுத்த பிறகு ஷ்ரேயஸ் அய்யர் கான்பூரில் அறிமுக டெஸ்டில் சதமெடுத்து லெஜண்ட் குண்டப்பா விஸ்வநாத்துடன் சமமாகத் திகழ்கிறார்.
உண்மையில் ஒரு உண்மையான டெஸ்ட் கிரிக்கெட்டர் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளார், இன்று புதிதாகப் பிறந்தார் புதிய டெஸ்ட் வீரர் ஷ்ரேயஸ் அய்யர்
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.