கான்பூரில் நடைபெறும் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று நியூசிலாந்து அணி 284 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து உணவு இடைவேளியின் போது 1 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடிவருகிறது.
இன்று காலை 4/1 என்று தொடங்கிய நியூசிலாந்து 31 ஓவர்கள் ஆடி 75 ரன்களுக்கு விக்கெட் எதையும் இழக்கவில்லை. இந்திய பவுலர்களில் அஸ்வின் மட்டுமே அச்சுறுத்தலாக இருக்கிறார், இவர் பந்துகள் மட்டுமே திரும்புகின்றன, அக்சர் படேல் எப்போதுமே நேர் நேர் தேமாதானே, ஆனால் 7 ஓவர் 3 மெய்டன் 6 ரன் என்று டைட்டாக வீசுகிறார். இவரது நேர் பந்துகள் திரும்பும் என்று எதிர்பார்த்து ஏமாந்துதான் அவருக்கு விக்கெட்டுகளை கொடுத்து விடுகின்றனர்.
டாம் லேதம் 35 ரன்களுடனும் இரவுக்காவலன் வில்லியம் சோமர்வில் 36 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். ரவிசந்திரன் அஸ்வின் பிக் ஆஃப் த பவுலர், 12 ஓவர் 2 மெய்டன் 19 ரன் ஒரு விக்கெட். இன்னும் 60 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்துக்குத் தேவை இன்னும் 205 ரன்கள். ஆனால் இன்னமுமே கூட இந்தியாவுக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, ஏனெனில் ஒரு விக்கெட்டுகள் விழுந்தால் கொத்தாக விக்கெட்டுகள் விழ சாத்தியமுள்ளன.
டாம் லேதமும், சோமர்வில்லும் பந்துக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அந்த மரியாதையைக் கொடுத்து ஆடினர். சோமர்வில் டெக்னிக் அபாரம், ஸ்பின்னர்களை அபாரமாக ஆடுகிறார், வேகப்பந்து வீச்சில் உமேஷ் யாதவ்வை இரண்டு பேக்ஃபுட் பஞ்ச் பவுண்டர்களுடன் 5 பவுண்டரிகள் விளாசினார். டாம் லேதம் முன் காலை நகர்த்தி ஆடினாலும் பின்னால் சென்று ஆடும்போதும் சவுகரியாமகவே ஆடுகிறார்.
ஸ்வீப் ஷாட்களை ஆடி ஸ்கோர் போர்டை நகர்த்துகிறார் லேதம். 2வது செஷனிலும் இதே போல் ஆடி 75-80 ரன்களை1 விக்கெட்டை மட்டுமே இழந்து எடுத்தால் நியூசிலாந்து 160 ரன்கள் பக்கம் இருக்கும், கடைசி செஷனில் 125 ரன்கள் எடுக்க வேண்டி வரும் அது ரிஸ்க், எனவே ட்ரா செய்ய அருமையான வாய்ப்பு, நியூசிலாந்து ட்ரா செய்தாலே அது அவர்களுக்கு ஒரு உணர்வு ரீதியான வெற்றிதான்.
ஜேமிசன், சவுதீ இந்த செத்த பிட்சிலும் அபாரமாக வீசி நம்மை காலி செய்கின்றனர், ஆனால் நம் இஷாந்த் சர்மாவுக்கு ஒன்றுமே வரவில்லையே, உமேஷ் யாதவ் பாவம் உள்ளூர் குதிரையாக மட்டுமே அவரைப் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது, இன்னொரு ஸ்பெஷலிஸ்ட் பவுலர் தேவை, குல்தீப் யாதவ் போன்று யாராவது ஒருவர் தேவை. ஜடேஜாவை வைத்துக் கொள்வது இதுதான் பிரச்சனை, அக்சர் படேல் பந்துகள் ஸ்பின் ஆவதில்லை.
இந்தப் பிட்சில் இப்படியே ஆடலாம், அடித்து ஆடப்போனால் பெரிய ரிஸ்க், இது நியூசிலாந்து பேட்டர்களுக்கு நன்றாகவே தெரியும், உணவு இடைவேளைக்குப்பிறகு இந்திய அணி மாற்று உத்திகளுடன் இன்னும் ஆக்ரோஷமாக ஆடுமென்று எதிர்பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs New Zealand