• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மிடில் ஸ்டம்ப் எகிறும் பந்துக்கு எல்.பி. மறுப்பு- கடைசியில் ஜடேஜாவை வீழ்த்தி பழிதீர்த்த சவுதீ 5 விக்கெட்

மிடில் ஸ்டம்ப் எகிறும் பந்துக்கு எல்.பி. மறுப்பு- கடைசியில் ஜடேஜாவை வீழ்த்தி பழிதீர்த்த சவுதீ 5 விக்கெட்

கான்பூர் டெஸ்ட்- ஜடேஜா 5 விக்கெட்.

கான்பூர் டெஸ்ட்- ஜடேஜா 5 விக்கெட்.

நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு என்பதே நடுவர் தவறாக அவுட் கொடுத்தாலோ, நாட் அவுட் என்றாலோ தீர்ப்பை மாற்றுவதற்காகத்தான் இதில் அம்பயர்ஸ் கால் என்பது மிகப்பெரிய மோசடி, ஏனெனில் இதே பந்துக்கு களநடுவரே அவுட் கொடுத்தால் பேட்ஸ்மென் ரிவியூ செய்தாலும் அவுட் தான். தீர்ப்பை ரிவர்ஸ் செய்ய முடியாது எனும்போது எதற்கு ரிவியூ?

  • Share this:
    கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 318 ரன்கள் எடுத்துள்ளது, முதல் ஓவரிலேயே ஜடேஜா நாட் அவுட் சர்ச்சை எழுந்தது, ஆனால் ஜடேஜாவை வீழ்த்தி பழி தீர்த்தார் டிம் சவுதீ.

    இன்று ஜடேஜா 50 ரன்களில் இருந்த போது முதல் ஓவரை சவுதீ வீசினார். ரவுண்ட் த விக்கெட்டில் வீசி பந்தை உள்ளே கொண்டு சென்றும் வெளியே கொண்டு சென்றும் வீசிக்கொண்டிருந்தார். இதில் 5வது பந்து ரவுண்ட் த விக்கெட்டின் குட் லெந்திலிருந்து உள்ளே வந்து நேராக ஜடேஜாவின் கால்காப்புக்கு சற்று மேலே தாக்கியது, சவுதீ பெரிய அப்பீல் செய்தார் நடுவர் ஷர்மா அவுட் கொடுக்கவில்லை.

    கேன் வில்லியம்சன் உடனே ரிவியூ செய்தார். ரிவியூவில் பந்து மட்டையில் படவில்லி என்று தெள்வாகத் தெரிய ஜடேஜா வாங்கிய இடமும் சரியாக ஸ்டம்புக்கு நேராக இருந்தது ரீப்ளேயில் பந்து மிடில் ஸ்டம்பை பதம் பார்த்திருக்கும் என்று தெரிந்தது, ஆனால் ரிவியூவிலும் நாட் அவுட். டிம் சவுதி, கேன் வில்லியம்சன் மற்றும் ஒட்டுமொத்த நியூசிலாந்து அணியும் ஏமாற்றமடைந்தன, முகத்தில் புன்னகையுடன் சவுதி தொடர்ந்தார்.

    நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு என்பதே நடுவர் தவறாக அவுட் கொடுத்தாலோ, நாட் அவுட் என்றாலோ தீர்ப்பை மாற்றுவதற்காகத்தான் இதில் அம்பயர்ஸ் கால் என்பது மிகப்பெரிய மோசடி, ஏனெனில் இதே பந்துக்கு களநடுவரே அவுட் கொடுத்தால் பேட்ஸ்மென் ரிவியூ செய்தாலும் அவுட் தான். தீர்ப்பை ரிவர்ஸ் செய்ய முடியாது எனும்போது எதற்கு ரிவியூ?

    இதே இந்திய அணி பவுலிங் செய்யும் போது இப்படி மார்ஜினலாக நடுவர் அவுட் கொடுத்தார் என்றால் பேட்ஸ்மென்கள் ரிவியூ செல்லுபடியாகாது. இது ஏன்? இங்கிலாந்தில் நடந்த 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா கேட்கும்போதெல்லாம் கையை உயர்த்தினார் நடுவர், வெஸ்ட் இண்டீஸ் அணி ரிவியூ செய்து செய்து ரிவியூவை இழந்தது, மேலும் வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் செய்த போதும் களநடுவர் பிளம்ப் அவுட்டை நாட் அவுட் என்று கூறுகிரார் ரிவியூ செய்தால் மீண்டும் வெஸ்ட் இண்டீசுக்குத்தான் ரிவியூ இழப்பு ஏற்பட்டதைப் பார்த்தோம்.

    இதையும் படிங்க: Shreyas Iyer: வரலாறு படைத்தார் ஷ்ரேயஸ் அய்யர்- முதல் டெஸ்ட்டிலேயே சதமடித்து சாதனை

    ஆனால் சவுதி அயராமல் மீண்டும் பவுலிங் செய்து ஒரு ஓவர் சென்ற பிறகு ஜடேஜாவின் ஸ்டம்ப்களை பெயர்த்தார். இதோடு மட்டுமல்லாமல் சவுதீ இன்று விருத்திமான் சகா, ஷ்ரேயஸ் அய்யர் (105), அக்சர் படேல் விக்கெட்டையும் வீழ்த்தி 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார், இந்திய அணி 313/8 என்று உள்ளது. அஸ்வின் 20 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: