Home /News /sports /

India vs New Zealand- மூன்று முறை நடுவர் விளையாடியும் அசைக்க முடியா நியூசிலாந்து- 129 நோ லாஸ்

India vs New Zealand- மூன்று முறை நடுவர் விளையாடியும் அசைக்க முடியா நியூசிலாந்து- 129 நோ லாஸ்

நியூசிலாந்து தொடக்க ஜோடி லேதம், வில் யங்

நியூசிலாந்து தொடக்க ஜோடி லேதம், வில் யங்

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியை 345 ரன்களுக்குச் சுருட்டிய நியூசிலாந்து பிறகு விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்து பதிலடி கொடுத்துள்ளது.

இன்று இன்னும் 3 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முடிக்கப்பட்ட போது நியூசிலாந்தின் தொடக்க வீரர் வில் யங் 75 ரன்களுடனும், டாம் லேதம் 50 ரன்களுடனும் அசைக்க முடியா இடத்தில் நாட் அவுட்டாக இருக்கின்றனர்.

இன்று முதலில் ஷ்ரேயஸ் அய்யர் சதம் எடுத்து அசத்தினார், அதனூடாகவே நியூசிலாந்தின் டிம் சவுதீ அற்புதமாக வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பின்னி எடுத்தார். பிறகு தொடக்க வீரர்கள் நிலைநாட்டினர், இந்திய பந்து வீச்சு என்ன செய்து பார்த்தும் இருவரையும் அசைக்க முடியவில்லை.

நடுவரின் திருவிளையாடல்:

ஜடேஜா பேட் செய்த போது பிளம்ப் எல்.பி.யை நாட் அவுட் என்ற நடுவர், பிறகு டாம் லேதமுக்கு 3 முறை அவுட் கொடுத்தனர். மூன்று முறையும் அது நாட் அவுட் என்று ரிவியூவில் தப்பினார் லேதம். நம்ம பேட்டர் என்றால் பேசாமல் இருப்பது ரிவியூவில் அம்பயர்ஸ் கால் என்று வந்து விடும், அவர்கள் என்றால் யோசிக்காமல் கையை உயர்த்துவது இதுதான் நம் அம்பயரிங்.

டாம் லேதமுக்கு 3 முறை அவுட் கொடுத்தார், மூன்றும் நாட் அவுட். 2 முறை எல்.பி.டபிள்யூ முறையீடு ஆனால் 2 முறையும் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டதால் தப்பினார் லேதம், மட்டை உள்விளிம்பைக் கூட அத்தனை அருகில் இருக்கும் நடுவருக்குக் கேட்கவில்லை என்றால் என்ன டெஸ்ட் வைத்து இவர்களை நடுவர்களாகத் தேர்வு செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. இன்னொரு அவுட் தீர்ப்பு விக்கெட் கீப்பர் சகா கேட்ச் என்று கொடுக்கப்பட்டது, ஆனால் அது எட்ஜ் அல்ல. கோலி இல்லாதபோதும் ஏன் நடுவர்கள் பாவம் இத்தனை பிரஷருடன் பணியாற்ற வேண்டும்.

ஒருமுறை 2 முறை அல்ல, நியூசிலாந்து பவுலிங் செய்த போது நமக்கு அவுட் ஆகும் பந்துக்கெல்லாம் கூட நாட் அவுட், அவர்கள் பேட்டிங் செய்யும் போது இன்சைடு எட்ஜுக்கு எல்.பி.தீர்ப்பு, மட்டையில் படாததற்கு காட் பிகைண்ட் தீர்ப்பு, வெளிநாட்டு அணியினர் நம் விருந்தினர்கள் என்ற எண்ணம் வேண்டும், ஓரவஞ்சனை கூடாது.

யங், மற்றும் லேதம் இந்திய அணியின் பந்து வீச்சு உத்தியோடு சேர்த்து நடுவர்களின் திருவிளையாடல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 13 பேருக்கு எதிராக நியூசிலாந்துக்கு கஷ்டம்தான், ஆனால் யங் மற்றும் லேதம் ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்கி விட்டனர், நாளை நியூசிலாந்து அணி உடையலாம் ஆனால் இன்று இப்படி ஆட வேண்டும் என்று அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

அஸ்வின், அக்சர் படேல், ஜடேஜா மும்மூர்த்திகள் கடைசியில் இந்தப் பிட்சில் எப்படி வீச வேண்டும் என்ற ரிதமுக்கு வந்தனர். ஆட்டம் முடியும் தறுவாயில் நியூசிலாந்து தொடக்க வீரர்களுக்கு குடைச்சல் கொடுத்தனர், நிறைய பீட் ஆயினர். நாளை நியூசிலாந்து அணிக்கு முக்கியமான நாள். பிட்ச் உடையும் தறுவாயில் உள்ளது. பவுன்சும் மேலும் கீழுமாக உள்ளது, இன்னும் 216 ரன்கள் நியூசிலாந்துக்கு தேவை எனும்போது கடினமான பணி காத்திருக்கிறது.
Published by:Muthukumar
First published:

Tags: First test cricket match, R Ashwin, Ravindra jadeja

அடுத்த செய்தி