• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இருமுறை தப்பிய ஷுப்மன் கில் அரைசதம், அகர்வால் ஏமாற்றம்- இந்தியா 82/1

இருமுறை தப்பிய ஷுப்மன் கில் அரைசதம், அகர்வால் ஏமாற்றம்- இந்தியா 82/1

சிக்ஸ் விளாசும் ஷுப்மன் கில்- கான்பூர் டெஸ்ட்

சிக்ஸ் விளாசும் ஷுப்மன் கில்- கான்பூர் டெஸ்ட்

இரண்டு முறை எல்.பி. ஆனார் ஷுப்மன் கில். ஒருமுறை சவுதீ பந்தில் நடுவர் அவுட்டே கொடுத்து விட்டார், ஆனால் ரிவியூவில் பந்து மட்டை உள்விளிம்பில் பட்டது தெரிந்தது. இன்னொரு முறை இடது கை ஸ்பின்னர் அஜாஜ் படேல் பந்தில் கால்காப்பில் வாங்கினார். அது க்ளோஸ், ஆனால் நியூசிலாந்து அப்பீலில் சொரத்து இல்லை, இது குளோஸ். இருமுறை ஷுப்மன் கில் தப்பினார்.

  • Share this:
    கான்பூர் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது, முதல் நாள் ஆட்டம் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.

    மாயங்க் அகர்வால் 28 பந்துகள் ஆடி 13 ரன்கள் எடுத்து ஒரே பவுண்டரியுடன் கைல் ஜேமிசன் வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை எந்த ஒரு டெக்னிக்கும் இல்லாமல் ஆடி எட்ஜ் செய்து கேட்ச் ஆகி வெளியேறினார், இந்த இன்னிங்ஸிலும் அவர் நிறைய பீட்டன் ஆனார். இந்த ஒரே சேதத்துடன் உணவு இடைவேளை வரை புஜாரா (15), ஷுப்மன் கில் (52) கொண்டு சென்றனர்.

    ஷுப்மன் கில் ஒருமுறை சவுதீ இன்ஸ்விங்கரை கால்காப்பில் வாங்கினார் லைவில் பிளம்ப் எல்.பி. என்பது போல்தான் இருந்தது, அதனால் நடுவர் கையை உயர்த்தினார். ஆனால் உடனேயே கில் ரிவியூ செய்ததைப் பார்க்கும் போது ஒருவேளை மட்டை உள்விளிம்பில் பட்டிருக்கலாம் என்ற ஐயமும் எழுந்தது, ஆம் அது உள்விளிம்பில் பட்டுத்தான் சென்றது. தப்பினார் கில்.

    இதைவிட பெரிய தப்புதல் என்னவெனில் அஜாஜ் படேல் வீசிய முதல் ஓவரிலேயே பந்து உள்ளே வர மட்டையைக் கடந்து சென்ற பந்து கால்காப்பை தாக்கியது, கில் பேடு குறுக்காக வந்தது. அப்பீல் சொத்தையாக அமைந்தது. அது நெருக்கமான ஒரு எல்.பி. ஆகும். கத்திக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார், இல்லையெனில் வில்லியம்சன் ரிவியூ செய்திருந்தாலும் கில்லுக்குப் பிரச்சனைதான். ஏனோ நியூசிலாந்து ஆர்வம் காட்டவில்லை.

    ஆனால் அதன் பிறகு ஸ்பின்னர் அஜாஜ் படேலை இரண்டு ஸ்கொயர் கட் பவுண்டரிகள் மற்றும் ஒருமுறை மேலேறி வந்து நேராக மெஜெஸ்டிக் சிக்ஸ் என்று பிரமாதமாக ஆடிவருகிறார் ஷுப்மன் கில், இது இவரது 4வது அரைசதமாகும்.

    நியூசிலாந்து அணி அஜாஜ் படேல், ரச்சின் ரவீந்திரா, சோமர்வில் என்று 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியுள்ளது. பிட்ச் மந்தமாக உள்ளது, ஸ்பின்னர்களுக்கு பந்து மெதுவாக திரும்புகிறது, ஆபத்தற்ற பிட்சாக இதுவரை உள்ளது. நாளை இப்படியிருக்குமா என்று தெரியாது.

    புஜாரா எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஆடுகிறார், ஸ்பின்னர்களுக்கு கால்களை பயன்படுத்தி மேலேறி வந்து ஆடுகிறார். 61 பந்துகள் ஆடியுள்ள புஜாரா 15 ரன்களில் இன்னும் பவுண்டரி எதுவும் அடிக்கவில்லை. நியூசிலாந்து தரப்பில் முதல் ஒருமணி நேரம் நன்றாக இருந்தது, கைல் ஜேமிசன் பிரமாதமாக வீசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: