கான்பூர் டெஸ்ட் கடைசி நியூசிலாந்து விக்கெட்டை வீழ்த்த முடியாமல் டிரா ஆனதையடுத்து இந்திய கேப்டன் ரஹானே மீது விமர்சனங்கள் எழ வாய்ப்பிருக்கிறது, ஏனெனில் அவர் டிக்ளேரை தாமதமாகச் செய்தார் என்று கூறலாம். 5ம் நாள் ஆட்டத்தில் முதல் செஷனில் விக்கெட்டை எடுக்க நெருக்கடி கொடுக்காமல் சற்றே டிபன்சிவ் ஆக இருந்தார் என்று கூறலாம்.
கடைசியில் வெளிச்சமின்மை பிரச்சனை எழுந்தது. நடுவர்கள் நிதின் மேனனும், ஷர்மாவும் அந்தச் சூழ்நிலையை சரியாகக் கையாண்டனர், ஒவ்வொரு ஓவருக்கு வெளிச்சத்தை செக் செய்து ஆடலாமா வேண்டமா என்று முடிவெடுத்தனர். கடைசியில் 7-8 நிமிடங்கள் இருந்த போது இன்னும் ஒரு ஓவரை அனுமதித்திருக்கலாம் என்று ரசிகர்கள் கூறினால் அது இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையினால் இருக்கலாமே தவிர உண்மையில் நிலவரத்தைப் பார்த்தால் ஒரு ஓவர் இருக்கிறது நமக்கு ஒரு விக்கெட் தேவை அவர்கள் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இருக்குமேயானால் அந்த ஒரு ஓவரை வெளிச்சத்தைப் பொருட்படுத்தாமல் இரு அணிகளின் சம்மதத்துடன் தொடரலாம். ஆனால் கான்பூரில் நியூசிலாந்து வெற்றி பெறும் நிலைக்கு வெகு தொலைவில் இருந்தது.
ஆனால் இந்த வெளிச்சமின்மையில் ஆட்டத்தை தொடர்வது இந்திய அணிக்குச் சாதகமாக, அதாவது ஒரு அணிக்குச் சாதகமாக ஒருதலைபட்சமாகவே இருக்கும் என்று வர்ணனையில் சுனில் கவாஸ்கர் கூறியது உண்மையில் முக்கியமான ஒரு பாயிண்ட். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதுகுறித்து இந்திய கேப்டன் ரஹானே ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘டிக்ளேர் சரியான நேரத்தில்தான் செய்தோம். எங்களால் இயன்றதை முயன்றோம். நியூசிலாந்து நன்றாக ஆடியது. இன்று இரண்டாவது செஷனில் ஆட்டத்தை வெற்றியை நோக்கித் திருப்பினோம். வேகப்பந்து வீச்சாளர்களும் நன்றாகவே வீசினர். டிக்ளேர் செய்வதற்கு முன்பாக கொஞ்சம் கூடுதல் ரன்கள் தேவை என்று கருதினோம். அக்சர் படேல், சாஹா நன்றாக ஆடினர். அந்த கூட்டணி கொஞ்சம் செல்லட்டும் என்று விட்டோம்.
ஷ்ரேயஸ் அய்யர் குறித்து மகிழ்ச்சி. அவர் தன் ஆட்டத்தை தொடர்ந்து சீரமைத்துக் கொள்பவர். அடுத்த டெஸ்ட்டுக்கு கோலி வருகிறார். அது பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. நிர்வாகம் முடிவு செய்யும், இவ்வாறு கூறினார் ரகானே.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ajinkya Rahane, India vs New Zealand, Kane Williamson, Shreyas Iyer