முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘தென் ஆப்பிரிக்காவில் தேவையில்லாமல் ரஹானேவை நீக்கவில்லையா கோலி’

‘தென் ஆப்பிரிக்காவில் தேவையில்லாமல் ரஹானேவை நீக்கவில்லையா கோலி’

விராட் கோலி

விராட் கோலி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மும்பை டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக நாளை அஜிங்கிய ரஹானேவை உட்கார வைப்பதனால் ஒரு கேடும் ஏற்படாது, ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

செடேஷ்வர் புஜாரா கடந்த 2 ஆண்டுகளில் ஆடியதைப் பார்த்தோமானால், 2020-ல் 4 டெஸ்ட் போட்டிகளில் 163 ரன்கள் சராசரி 20.38. 2021-ல் கொஞ்சம் பரவாயில்லை ரகத்தில் 12 டெஸ்ட்கள்ல் 626 ரன்கள் 31.30. சரி இவர்கள் இப்படியென்றால் விராட் கோலியே 2019-ல் காய்ஞ்சு போன வங்கதேச அணிக்கு எதிராக வீரத்தைக் காட்டி சதம் எடுத்ததோடு சரி. அதன் பிறகு 3 அரைசதங்கள்தான் எடுத்துள்ளார்.

மயங்க் அகர்வாலும் 2020-ல் 4 டெஸ்ட் போட்டிகளில் 133 ரன்கள் சராசரி 16.63. 2021-ல் 2 டெஸ்ட் 64 ரன்கள் என்று வாய்ப்பை ஷ்ரேயஸ் அய்யர் போல் பயன்படுத்தவில்லை. அதனால் அகர்வால் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் கோலி வருகிறார் என்பது உறுதியாகிறது.

தென் ஆப்பிரிக்காவில் ஒருமுறை தேவையில்லாமல் ரஹானேவை உட்கார வைத்தார் கேப்டன் விராட் கோலி, அப்போது பெரிதாக ஒன்றும் பாதிக்கவில்லை, அதே போல் இப்போது உட்காரவைத்தால் என்ன கெட்டு விடப்போகிறது? என்று கேள்வி எழுப்புகிறார் தினேஷ் கார்த்திக்.

இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் கூறுகையில் “ஷ்ரேயஸ் அய்யர் முதல் போட்டியிலேயே சிறப்பாக பேட் செய்திருக்கிறார். ஷ்ரேயஸ் அய்யரின் பேட்டிங்கால் இப்போது பிரஷர் உண்மையில் ரஹானே மீதுதான் திரும்பியிருக்கிறது, மும்பையில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் ரஹானே நீக்கப்படவும் வாய்ப்புள்ளது.

தென் ஆப்பிரிக்கப் பயணத்தின்போது, இதேபோன்று ரஹானே ஒரு போட்டியில் நீக்கப்பட்டு மீண்டும் அழைக்கப்பட்டார். ரஹானே ஒருபோட்டியில் அமரவைக்கப்படுவதால், இந்திய அணிக்கு எந்தக் கெடுதலும் வராது.

ஷ்ரேயஸ் அய்யர் இந்தியாவை முதல் டெஸ்ட் போட்டியில் பல சந்தர்பங்களில் காப்பாற்றிவிட்டார், பேட்டிங்கும் சிறப்பாகத்தான் இருந்தது. ஆதலால், ரஹானேவை ஒரு போட்டியில் நீக்குவதால் எந்த மோசமும் ஏற்படாது, அவ்வாறு அவரை நீக்கினால் ரஹானே மீதான அழுத்தத்தை குறைக்கும்.

இதேபோன்ற அழுத்தம் புஜாரா மீது இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருப்பினும் புஜாரா சதம் அடித்துநீண்ட இன்னிங்ஸ் ஆகிறது. கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் சதம் அடித்தார், தற்போது சராசரியும் 20 ரன்களாகத்தான் இருக்கும். இரு வீரர்கள் தங்களின் தரத்தை உயர்வாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் சிறப்பாக விளையாடவி்ல்லை என்பது அவர்களுக்கே தெரியும்.

இவ்வாறு தினேஷ் கார்த்திக் தெரிவி்த்தார்.

First published:

Tags: Ajinkya Rahane, Captain Virat Kohli, India vs New Zealand