Home /News /sports /

சாஹா நன்றாக ஆடியும் என்ன பயன்? ஸ்ரீகர் பரத்தைக் கொண்டு வர கடும் ‘லாபி’

சாஹா நன்றாக ஆடியும் என்ன பயன்? ஸ்ரீகர் பரத்தைக் கொண்டு வர கடும் ‘லாபி’

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

விருத்திமான் சாஹா ஒரு திடமான பேட்டர். அவருக்குள் ஒரு போராளி எப்போதும் ஒளிந்து கொண்டிருக்கிறான். கழுத்து பிரச்சனையில் அவதிப்பட்டவர், களமிறங்கி தன் ஸ்டான்சை மாற்றி வித்தியாசமாக பேட் செய்து அபாரமாக ஆடினார்.

    விருத்திமான் சாஹாவின் கடைசி டெஸ்டாக கான்பூர் டெஸ்ட் இருக்கலாம் என்றும் அவரது அருமையான 2வது இன்னிங்ஸ் அரைசதம் கடைசி இன்னிங்ஸ் ஆக இருக்கலாம் என்றும் அவரைப்போலவே ‘விதி’யை அனுபவித்த தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

    கான்பூர் டெஸ்ட் 4ம் நாள் ஆட்டத்தில் விருத்திமான் சாஹா பிரமாதமாக ஆடினார், அய்யரும் இவரும் சேர்ந்து போட்டியை இன்று வெற்றி பெறும் நிலைக்கு உயர்த்தியுள்ளார். ஆனால் பாவம் இவருக்கு லாபி இல்லை. கங்குலி ஊர்க்காரர் என்றாலும் அதையும் தாண்டிய மும்பை லாபி, பெங்களூரு லாபியைத் தாண்டி ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ஸ்ரீகர் பரத்தை அடுத்த மும்பை டெஸ்ட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.

    ஒரு காலத்தில் தினேஷ் கார்த்திக் என்னதான் நன்றாக ஆடினாலும் பெருந்‘தலை’கள் அவ்வளவு எளிதில் இவரை வரவிடவில்லை. இங்கிலாந்தில் சென்று வாசிம் ஜாஃபருடன் தொடக்கத்தில் இறங்கி 50க்கும் மேல் சராசரியை இருவரது கூட்டணி வைத்திருந்த நிலையிலும் எப்போதும் தலைக்கு மேல் கத்தி தொங்கும் வீரர்களில் ஒருவராக தினேஷ் கார்த்திக் கரியர் இருந்தது. அதே போல்தான் இப்போது விருத்திமான் சாஹாவும்.

    டி20 கிரிக்கெட், விளம்பரம், வர்த்தகம் கிரிக்கெட்டை ஆட்டிப்படைப்பதால் பேன்சி கிரிக்கெட்டர் ரிஷப் பண்ட், ஐபிஎல் வீரர் ஸ்ரீகர் பரத் கொண்டு வரப்பட வேண்டும் என்று நெருக்கடி உள்ளது. சாஹா நேற்று 61 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஆனால் இது அவரது கடைசி டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகவே இருக்க வாய்ப்பு என்கிறார் தினேஷ் கார்த்திக்:

    “சாஹாவிடம் பிடித்தது இதுதான், தேவைப்படும்போது ஒரு இன்னிங்சை ஆடிவிட்டார். இது அவரது கடைசி டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகக் கூட இருக்கலாம், ஏனெனில் ஸ்ரீகர் பரத்தை கொண்டு வருவதற்கு பிரஷர் அதிகம் இருக்கிறது.

    விருத்திமான் சாஹா ஒரு திடமான பேட்டர். அவருக்குள் ஒரு போராளி எப்போதும் ஒளிந்து கொண்டிருக்கிறான். கழுத்து பிரச்சனையில் அவதிப்பட்டவர், களமிறங்கி  வித்தியாசமாக பேட் செய்து அபாரமாக ஆடினார். களைப்படைந்த கால்கள் கொண்ட அவர் வந்து எப்படி ஆடுவது என்று மற்றவர்களுக்கு காட்டியதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

    நான் அவரை ஸ்ட்ரீட் பைட்டர் என்றே கூறுவேன். இது அவரை அவதூறு செய்வதற்காக சொல்லப்பட்டதல்ல, புகழ்வதற்காக சொல்லப்படுவது. அதாவது சூழ்நிலை மிக மிக கடினமாக இருக்கும் போது போராடுபவர் என்ற பொருளில் ஸ்ட்ரீட் பைட்டர். தேவைப்படும் போது ஒரு இன்னிங்சை ஆடினார் பாருங்கள்” என்றார் தினேஷ் கார்த்திக்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs New Zealand

    அடுத்த செய்தி