ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs NZ: உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் யார்?: ஆஸி கேப்டன் டிம் பெய்ன் கணிப்பு!

Ind vs NZ: உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் யார்?: ஆஸி கேப்டன் டிம் பெய்ன் கணிப்பு!

டிம் பெய்ன்,

டிம் பெய்ன்,

நியூசிலாந்து அணியே வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக பல கிரிக்கெட் வல்லுநர்களும் தெரிவித்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னின் இந்த கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று உலகின் நம்பர் 1 டெஸ்ட் கிரிக்கெட் அணி என மகுடம் சூடப்போகும் அணி எது என்பது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் டிம் பெய்ன் கணிப்பு வெளியிட்டுள்ளார்.

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 12 அணிகளுள் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் மேற்கு இந்திய தீவுகள் என 9 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

கொரோனா பரவலுக்கு மத்திலும் தொடர்ந்த இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. உலக டெஸ்ட் சாமபியன்ஷிப் இறுதி போட்டி சௌதாம்ப்டன் மைதானத்தில் ஜூன் 18-ம் தேதி தொடங்க உள்ளது.

Also Read:   ரிக்கி பாண்டிங்கின் இந்த உலக சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 11.72 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது இடம் பிடிக்கும் அணிக்கு 5.86 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரண்டு அணிகளோடும் மோதி 3வது இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன், தன்னுடைய அனுபவத்தில் இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெறப் போகும் அணி குறித்து தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளார்.

Also Read:   தலையில் காயம்: நினைவாற்றலை இழந்த தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டூப்ளசிஸ்!

டிம் பெய்ன் கூறுகையில், “எனது கணிப்பு என்னவென்றால், இந்தியா ஏற்கனவே வெளிப்படுத்திய விளையாட்டுக்கு கொஞ்சம் அருகில் விளையாடினால் போதும் இந்திய அணி மிகவும் எளிதாக வெற்றி பெறும்” என கூறியுள்ளார்.

நியூசிலாந்து வீரர்களுக்கு, இங்கிலாந்தின் செளத்தாம்டன் மைதான சூழல் நன்கு பழக்கப்பட்டது என்பதால் நியூசிலாந்து அணியே வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக பல கிரிக்கெட் வல்லுநர்களும் தெரிவித்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னின் இந்த கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அதே நேரத்தில் இங்கிலாந்து மண்ணில், அந்த அணியை ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வீழ்த்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து பேசிய டிம் பெய்ன், நியூசிலாந்து நல்ல அணி என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனாலும் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணி முழுமையான பலத்தை பெற்றிருக்கவில்லை. அந்த அணியின் முக்கிய வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஃபோக்ஸ் ஆகிய வீரர்கள் அந்த அணியில் விளையாடவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது என்றார் டிம் பெய்ன்.

Published by:Arun
First published:

Tags: Australia, ICC World Test Championship, New Zealand, Team India, Tim Paine