Home /News /sports /

கான்பூர் டெஸ்ட்: அஸ்வின் புதிய உச்சம்- ஹர்பஜன் சிங் டெஸ்ட் சாதனை தகர்ப்பு

கான்பூர் டெஸ்ட்: அஸ்வின் புதிய உச்சம்- ஹர்பஜன் சிங் டெஸ்ட் சாதனை தகர்ப்பு

அஸ்வின் 418 டெஸ்ட் விக்கெட்டுகள் சாதனை- கான்பூர் டெஸ்ட்

அஸ்வின் 418 டெஸ்ட் விக்கெட்டுகள் சாதனை- கான்பூர் டெஸ்ட்

அஸ்வின் 80 டெஸ்ட் போட்டிகளில் 418 விக்கெட்டுகளை எடுத்தார். ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உலக அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 13ம் இடத்திலிருக்கிறார் அஸ்வின். அனில் கும்ப்ளே 4ம் இடத்தில் இருக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
    இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெறும் 1வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 418வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி ஹர்பஜன் சிங் (417) எண்ணிக்கையைக் கடந்தார். நியூசிலாந்து அணி 120/3. வில்லியம்சன் 22 ரன்களுடன் ஆடி வருகிறார் ராஸ் டெய்லர் இப்போதுதான் இறங்கியுள்ளார்.

    இரண்டாவது இன்னிங்சிலும் அரைசதம் கண்டு வலுவாகச் சென்று கொண்டிருந்த டாம் லேதம் (52) விக்கெட்டை வீழ்த்தி 418வது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார் அஸ்வின். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் ஒன்றுமேயில்லாத சொத்தைப் பந்து அது. ஆஃப்ஸ்டம்புக்கு வெளியே தேமேனு சென்று கொண்டிருந்த பந்தை மட்டையில் வாங்கி உள்ளே விட்டுக் கொண்டு போல்டு ஆகி வெளியேறினார். ஒருவிதத்தில் எளிதாக கிடைத்த விக்கெட்தான். அந்தப் பந்தை அவர் ஆடாமலேயே விட்டிருந்தால் அது ஒரு மோசமான பந்து என்று ஆகியிருக்கும்.

    எது எப்படியோ இந்திய லெஜண்ட் பவுலிங் வரிசையான அனில் கும்ப்ளே (619), கபில் தேவ் (434) வரிசையில் தற்போது ஹர்பஜன் சிங்கைக் கடந்து 418 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 3ம் இடத்தில் இருக்கிறார் அஸ்வின். உண்மையில் இந்த இடம் மட்டுமல்ல முதலிடம் பெறவும் தகுதி பெற்ற ஒரு பவுலர்தான் அஸ்வின் என்பதில் சந்தேகமில்லை. இதை விட நல்ல பந்துக்கு இந்த சாதனை விக்கெட் கிடைத்திருந்தால் அஸ்வின் இன்னும் மகிழ்ந்திருப்பார். இங்கிலாந்து தொடரிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பார், ஆனால் கோலி, ரவிசாஸ்திரி கூட்டணி வாய்ப்பு கொடுக்காமலேயே அவரை பழி வாங்கினர்.

    அஸ்வின் 80 டெஸ்ட் போட்டிகளில் 418 விக்கெட்டுகளை எடுத்தார், ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உலக அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 13ம் இடத்திலிருக்கிறார் அஸ்வின். அனில் கும்ப்ளே 4ம் இடத்தில் இருக்கிறார்.

    இதையும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போக உள்ள கே.எல்.ராகுல்!

    நியுசிலாந்து அணி உணவு இடைவேளை வரை விக்கெட்டை இழக்காமல் உணவு இடைவேளைக்குப் பிறகு சோமர்வில் (36) ரன்களில் உமேஷ் யாதவ்விடம் ஆட்டமிழந்தார். சுப்மன் கில்லின் அபார கேட்ச் அது, சற்று முன் அஸ்வினின் 418வது விக்கெட்டாக வீழ்ந்தார் டாம் லேதம், நியூசிலாந்து 121/3 என்று ஆடிவருகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs New Zealand, R Ashwin

    அடுத்த செய்தி