நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சிற்கு அகமதாபாத் மைதானம் சாதகமாக இருக்கும் என்பதால் இந்த போட்டியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்ற நிலையில், அடுத்ததாக 3 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கெட்தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசிப் போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
3ஆவது டி20 –யில் விளையாடும் இந்திய வீரர்கள் - ஷுப்மான் கில், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் / நியூசிலாந்து அணி வீரர்கள் - ஃபின் ஆலன், டெவோன் கான்வே(விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர்(கேப்டன்), இஷ் சோதி, லாக்கி பெர்குசன், பென் லிஸ்டர், பிளேயர் டிக்னர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket