நாளை, மூன்றாம் தேதி மும்பையில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தொடங்கும் 2வது இறுதி டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் கோலி திரும்புகிறார், எனவே யாரை அணியிலிருந்து நீக்குவது என்பதில் சிக்கல் எழுந்தது, இப்போது அதற்கு ஒரு தீர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே படுமோசமாக ஆடிவரும் புஜாராவை தொடக்க வீரராக ஷுப்மன் கில்லுடன் இறக்கிவிட்டு, மாயங்க் அகர்வாலை வெளியே தள்ளி அவரது இடத்துக்கு விராட் கோலி வரப்போகிறார் என்கிறது இந்திய அணி நிர்வாக வட்டாரங்கள்.
ஏனெனில் வரலாறு காணாத அறிமுக டெஸ்ட் கண்ட ஷ்ரேயஸ் அய்யர் 105 மற்றும் 65 என்று இரண்டு இன்னிங்ஸ்களிலும் முக்கியமான கிரைசிசில் இறங்கி ஆடிக்கொடுத்தார், இவரை இன்னொரு மொகீந்தர் அமர்நாத், என்றே பார்க்க வேண்டியுள்ளது, இந்நிலையில் இவருக்குப் பதிலாக விராட் கோலியை இறக்கி விடுவார்கள் என்றே லஷ்மண் போன்றவர்கள் கருதினர்.
பாவம் கருண் நாயர் இடம் இப்படித்தான் பறிபோனது, ரஹானேவுக்காக இறங்கிய கருண் நாயர் முச்சதம் விளாசிய பிறகும் கோடாரி அவர் தலையில் விழுந்தது ரஹானேவுக்காக, ஆனால் இன்று மோசமாக ஆடிவரும் ரஹானேவைத் தக்க வைக்க பாவம் மாயங்க் அகர்வால் தலையில் கோடாரி. கவுண்டமணி ஒருபடத்தில் சொல்வாரே ‘இந்த தொழிலதிபர் தொல்லை தாங்க முடியலைடா சாமி’ என்பது போல் ‘இந்த சீனியர் பிளேயர்கள் தொல்லை தாங்க முடியலைடா சாமி’ என்று நாமும் கூற வேண்டியதுதான்.
2015-ல் புஜாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடக்கத்தில் இறங்கி சதம் அடித்தார். ஆனால் அது வேற புஜாரா, இது வேற புஜாரா. இப்போது பேட் முழுக்க அவருக்கு எட்ஜ் ஆகவே உள்ளது, ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 2 இன்னிங்ஸ்களில் எட்ஜ் ஆகி அவுட் ஆனால் அல்லது விக்கெட் கீப்பர், ஸ்லிப்பில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தால் கூப்பிட்டு சொல்லி விடுவார்கள், இன்னொரு முறை எட்ஜ் ஆகி அவுட் ஆனால் அணியில் இருக்க மாட்டாய் என்று எச்சரிப்பார்கள்.
Also Read: ஒரு நாள் அணி கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா? தேர்வுக்குழு முக்கிய முடிவு
ஆனால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது, ஏனெனில் சீனியர் அல்லவா? விராட் கோலி அதைச் சொல்ல வேண்டும் ஆனால் அதைச் சொல்ல அவர் ஒழுங்காக ஆட வேண்டும் விராட் கோலியே தன் பார்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்.
எனவே இந்நிலையில் பாவம் மாயங்க் அகர்வால் நீக்கப்பட்டு கோலி வருகிறார். ஒருவேளை சாஹா, ஷுப்மன் கில் தொடக்கத்தில் இறங்கி மற்ற டவுன் ஆர்டரை மாற்றாமல் புஜாரா ஒன் டவுன், கோலி 2ம் டவுன், ஷ்ரேயஸ் அய்யர் 3ம் டவுன், ரகானே 4ம் டவுன் என்று இறக்க வாய்ப்புள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Captain Virat Kohli, India vs New Zealand, Shreyas Iyer