ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

மும்பை டெஸ்ட் ஒருதலைபட்சமாக முடிந்து விட்டது : ராகுல் திராவிட் வருத்தம்

மும்பை டெஸ்ட் ஒருதலைபட்சமாக முடிந்து விட்டது : ராகுல் திராவிட் வருத்தம்

நியூசிலாந்தை வீழ்த்தி பேடிஎம் சாம்பியன் ஆன இந்திய அணி

நியூசிலாந்தை வீழ்த்தி பேடிஎம் சாம்பியன் ஆன இந்திய அணி

நிறைய நேரம் இருந்தது அதனால் பாலோ ஆன் பற்றி கவலைப்படவில்லை. இது போன்ற ஒரு பிட்ச் நிலைமைகளில் கொஞ்சம் பேட்டிங் செய்து கொள்ளட்டும் என்று முடிவெடுத்தோம். இளம் வீரர்களுக்கும் பேட் செய்ய வாய்ப்பளிக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ராகுல் திராவிட் பயிற்சிப்பொறுப்பை எடுத்த முதல் டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்று வெற்றி பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் 16-ஐப் பெற்றுள்ளது, மும்பையில் இன்று நியூசிலாந்தை இந்தியா 372 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  ஆட்ட நாயகனாக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட தொடர் நாயகனாக அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்டம் முடிந்த பிறகு தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியதாவது:

  வின்னர்களாக தொடரை முடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. கான்பூரில் வெற்றிக்கு நெருக்கமாக வந்தோம். கடைசி விக்கெட்டை எடுக்க முடியவில்லை. அதனால் இங்கு கடினமாக உழைக்க வேண்டி வந்தது. இந்தமுடிவு ஒருதலைப்பட்சமானதாக உள்ளது. இந்த டெஸ்ட்டிலேயே கூட பின்னடைவு கண்டு பிறகு போராடி மேலே வர வேண்டியதாயிற்று.

  வீரர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஆட்டத்தை மேம்படுத்தியதைப் பார்க்க பெருமையாக உள்ளது. ஆம், நாம் சில சீனியர் வீரர்கள் இல்லாமல் ஆடினோம். அவர்களுக்குப் பதிலாக வந்த வீரர்கள் பிரமாதமாக ஆடினர். ஜெயந்த் யாதவுக்கு நேற்றைய தினம் கடினமாக அமைந்தது இன்று அவர் கற்றுக் கொண்டார். அதே போல் அதிக வாய்ப்புகள் கிடைக்காத மாயங்க் அகர்வால் ஷ்ரேயஸ் அய்யர், சிராஜ் போன்றவர்களும் அபாரம்.

  அக்சர் படேல் பேட்டிங்கில் வளர்ச்சி கண்டது குறித்து ஆச்சரியமடைந்தேன். நிறைய தெரிவுகள் நமக்கு இருக்கிறது. இதனால் வலுவான ஒரு அணியாக திகழ முடிகிறது. நிறைய நேரம் இருந்தது அதனால் பாலோ ஆன் பற்றி கவலைப்படவில்லை. இது போன்ற ஒரு பிட்ச் நிலைமைகளில் கொஞ்சம் பேட்டிங் செய்து கொள்ளட்டும் என்று முடிவெடுத்தோம். இளம் வீரர்களுக்கும் பேட் செய்ய வாய்ப்பளிக்க வேண்டும்.

  Also Read: IND vs NZ, 2nd Test: 45 நிமிடங்களில் முடிந்தது நியூசிலாந்து; மிகப்பெரிய வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா

   இனி வரும் காலங்களில் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள வேண்டி வரும் அதற்கு முன் கொஞ்சம் பயிற்சி செய்தல் நல்லது. காயங்கள் பெரிய சவால், நான் எதிர்கொள்ளும் சவால், அணித்தேர்வுக்குழு எதிர்கொள்ளும் சவால். ஆனால் அணித்தேர்வுக்குழுவுக்கு இந்தத் தலைவலி வரவேற்கத்தக்க தலைவலி. அணியில் நல்ல ஒற்றுமை இருக்கிறது, ஒருவரையொருவர் நன்றாக ஊக்கப்படுத்துகின்றனர். போட்டி தலைவலியல்ல நல்லதுதானே.

  இவ்வாறு கூறினார் ராகுல் திராவிட்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs New Zealand, Rahul Dravid