மும்பை டெஸ்ட் போட்டி முதல் நாள் பெய்த மழை காரணமாக டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது, இந்நிலையில் இந்திய அணியில் காயம் காரணமாக ரஹானே, இஷாந்த் சர்மா, ஜடேஜா இல்லை என்று அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அதே போல் நியூசிலாந்துக்கு பெரும் பின்னடைவாக கேப்டன் கேன் வில்லியம்சன் முழங்கை காயம் காரணமாக ஆட மாட்டார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இஷாந்த் சர்மாவின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் வலது முன் கையில் காயம் ஏற்பட்டு வீங்கியிருப்பதால் அவர் ஆட முடியாமல் போயுள்ளது, ரஹானே கோலிக்காக வழிவிட்டுள்ளார், அல்லது நீக்கப்பட்டுள்ளார் என்று சொல்வதற்குப் பதிலாக இடது ஹாம்ஸ்ட்ரிங் காயம் என்று கூறுகிறார்கள்.
ஆனால் இவர்களுக்கு மாற்று வீரர்கள் என்பதில் இஷாந்த் சர்மாவுக்குப் பதில் சிராஜ், ரஹானேவுக்குப் பதில் கோலி, ஜடேஜாவுக்குப் பதில் யார் என்பதுதான் தெரியவில்லை. ஒருவேளை பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஏனெனில் 3 ஸ்பின்னர்கள் தேவையில்லை என்கிறார் விராட் கோலி. அல்லது கே.எஸ்.பரத்தையோ, சூரியகுமார் யாதவையோ கொண்டு வர வாய்ப்புள்ளது. பரத், சகா இருவரும் அணியில் இருக்கவும் வாய்ப்புள்ளது, பைனல் லெவன் என்னவென்று தெரியவில்லை. காலை 9.30 மணிக்கு மைதானத்தை மேற்பார்வையிட்ட நடுவர்கள் இன்னும் ஆட்டம் தொடங்குவதற்கு ஏதுவாக மைதானம் இல்லை என்பதால் அடுத்த இன்ஸ்பெக்ஷனை 10.30 மணிக்கு வைத்துள்ளனர்.
இதற்கிடையே கேன் வில்லியம்சன் முழங்கை காயம் காரணமாக ஆட முடியாமல் போயுள்ளது. இந்திய அணியில் ஜடேஜாவுக்குப் பதில் 2016-ல் இங்கு சதம் எடுத்த ஜெயந்த் யாதவ் என்ற ஸ்பின்னர்- ஆல்ரவுண்ட ர் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ajinkya Rahane, India vs New Zealand, Ishant sharma, Ravindra jadeja