ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ajaz Patel: இந்திய அணியைக் கலங்கடிக்கும் மும்பைவாலா அஜாஜ் படேல்

Ajaz Patel: இந்திய அணியைக் கலங்கடிக்கும் மும்பைவாலா அஜாஜ் படேல்

அஜாஜ் படேல்

அஜாஜ் படேல்

அஜாஜ் படேல் மீண்டும் தன் பிறந்த மண்ணான மும்பைக்கு வந்து வான்கடேவில் ஆடுவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நியூசிலாந்து அணிக்கு ஆடும் இந்திய வம்சாவளி வீரர் அஜாஜ் படேல் மும்பையை பிறப்பிடமாகக் கொண்டவர், 1988-ல் நியூசிலாந்து அணி மும்பையில் வென்ற போது அஜாஜ் படேல் ஒரு மாதக் குழந்தை, மும்பையை விட்டு நியூசிலாந்து சென்ற போது அஜாஜ் படேலின் வயது 8. இப்போது மும்பையில் ஷுப்மன் கில், விராட் கோலி, புஜாரா, ஷ்ரேயஸ் அய்யர் என்று விழுந்த 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

  கான்பூர் டெஸ்ட் போட்டியில் கடைசியில் 10 ஒவர்கள் இன்னொரு இந்திய வம்சாவளி வீரர் ரச்சின் ரவீந்திராவுடன் நின்று போதிய வெளிச்சமின்மையிலும் ஜடேஜா, அஸ்வினின் அடங்காத ஆக்ரோஷ பவுலிங்கையும் திறம்பட தடுத்தாடி அபார டிரா செய்து ஹீரோக்கள் ஆகினர், இதில் அஜாஜ் படேலுக்கு சொந்த ஊர் மும்பை.

  அஜாஜ் படேல் மீண்டும் தன் பிறந்த மண்ணான மும்பைக்கு வந்து வான்கடேவில் ஆடுவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். மும்பைக்கு திரும்பியது அவரை உணர்ச்சிவயப்படுத்தியுள்ளது பழைய நினைவுகளைக் கிளறியுள்ளது.

  “நாங்கள் இங்கு கடந்த சில முறை விடுமுறையைக் கழிக்க குடும்பத்துடன் மும்பை வந்திருக்கிறோம். இப்போது வித்தியாசமான அனுபவம், கிரிக்கெட் வீரராக மும்பை மண்ணில் கால் பதித்துள்ளேன். நான் வான்கடேயில் ஐபிஎல் போட்டிகளுக்கு வந்திருக்கிறேன், நியூசிலாந்தின் சக வீரர் மிட்செல் மெக்லினாகன் என்னை அழைப்பார். இங்கு விளையாடியிருக்கிறேன், பயிற்சி பெற்றிருக்கிறேன். நான் ஆடியதை நியூசிலாந்திலேயே என் குடும்பத்தினர் பார்த்ததில்லை, இந்த முறை மும்பையில் அவர்களுக்கு நான் ஆடுவதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

  மும்பை என்றாலே எனக்கு நினைவு ஏக்கம் வந்து விடும். கான்பூரில் 23 பந்துகளைச் சந்தித்து விக்கெட்டை இழக்காமல் ட்ராவுக்கு உதவி ஹீரோவானார். இன்று அபாரமான பவுலிங்கில் தான் பிறந்த மண்ணில் ஷுப்மன் கில் எட்ஜைப்பிடித்து வெளியேற்ற, புஜாரா, கோலியை ஒரே ஓவரில் டக் அவுட் செய்து பிறகு பார்மில் உள்ள ஷ்ரேயஸ் அய்யரையும் கடைசியாக காலி செய்துள்ளார் இந்த மும்பைவாலா அஜாஜ் படேல்.

  இந்தியாவில் பிறந்து இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் வந்து ஆடும் அதிர்ஷ்டம் ஒருசிலருக்குத்தான் கிடைக்கும், அதுவும் ஸ்பின் பவுலிங்குக்கு எதிராக தாதாக்களான இந்திய அணியை ஆட்டிப்பார்க்கிறார் அஜாஜ் படேல் என்ற இந்தியர். அஜாஜ் படேல் மும்பையில் 23 ஓவர் 10 மெய்டன் 49 ரன்கள் 4 விக்கெட்டுகள்.

  இந்திய அணி தற்போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுக்க, மாயங்க் அகர்வால் 90 ரன்களுடனும் சகா ரன் எடுக்காமலும் ஆடி வருகின்றனர். அகர்வால் 181 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 பிரமாத சிக்சர்களுடன் கலக்கி வருகிறார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs New Zealand