Home /News /sports /

மும்பை டெஸ்ட் : இந்தியா பேட்டிங் தேர்வு... இரு அணிகளிலும் முக்கிய மாற்றம்

மும்பை டெஸ்ட் : இந்தியா பேட்டிங் தேர்வு... இரு அணிகளிலும் முக்கிய மாற்றம்

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி

மும்பையில் நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தீர்மானித்துள்ளார். ஜடேஜாவுக்குப் பதிலாக ஜெயந்த் யாதவ் வந்துள்ளார்.

ரஹானே, இஷாந்த் சர்மா காயம் என்பதால் அவர்களுக்கு பதிலாக விராட் கோலி, சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் இல்லை என்பதால் டேரில் மிட்செல் சேர்க்கப்பட்டுள்ளார். டாம் லேதம் கேப்டனாக செயல்படுவார்.

இந்திய அணி: ஷுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ஷ்ரேயஸ் அய்யர், சாஹா, அஸ்வின், ஜெயந்த் யாதவ், அக்சர் படேல், சிராஜ், உமேஷ் யாதவ்.

நியூசிலாந்து அணி: வில் யங், டாம் லேதம் (கேப்டன்), டேரில் மிட்செல், ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளண்டெல், ரச்சின் ரவீந்திரா, கைல் ஜேமிசன், டிம் சவுத்தீ, வில் சோமர்வில், அஜாஜ் படேல்.

பிட்ச் கொஞ்சம் ஹார்டாக இருக்கிறது, கொஞ்சம் புற்கள் காணப்படுகிறது, ஸ்பின்னர்களுக்கான ஸ்பாட்டில் பிட்ச் விரிசல் விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 2வது இன்னிங்ஸ் கடினமாக இருக்கும். என்று தெரிகிறது. 4வது இன்னிங்ஸ் பேட் செய்வது கடினம், எனவே டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்யும் என்று அஜித் அகார்க்கர் தன் பிட்ச் அறிக்கையில் தெரிவித்தார்.

விராட் கோலி கூறும்போது, “இந்தப் பிட்சில் முதலில் பேட் செய்வது சிறந்தது. முதல் இன்னிங்ஸ் மிக மிக முக்கியமானது. முதல் இன்னிங்ஸ்தான் இங்கு பேட் செய்ய சிறப்பாக இருக்கும் என்று தெரிகிறது. ஜெயந்த் யாதவ் வந்திருக்கிறார்.

இதையும் படிங்க: மும்பை டெஸ்ட் : ரஹானே, இஷாந்த் சர்மா, ஜடேஜா இல்லை; கேன் வில்லியம்சன் காயம்

நியூசிலாந்து கேப்டன் கூறும்போதும் டாஸ் வென்று முதலில் பேட் செய்திருப்பேன். பவுலிங் செய்வதிலும் ஒன்றும் அதிருப்தியில்லை, கான்பூரில் ஸ்விங் செய்தோம், இங்கும் கொஞ்சம் ஸ்விங் ஆகும் அதை முழுமையாகப் பயன்படுத்துவோம் என்றார்.
Published by:Muthukumar
First published:

Tags: Captain Virat Kohli, India vs New Zealand

அடுத்த செய்தி